இலங்கையில் மூன்றாவது சிறுபான்மை சமூகமாக தமிழர்கள் மாறும் நிலை:வியாழேந்திரன்
தமிழ் அரசியல் தலைவர்கள் இராஜதந்திர அரசியலை சரியாக பயன்படுத்தாவிட்டால் இலங்கையில் மூன்றாவது சிறுபான்மை சமூகமாக தமிழர்கள் மாறும் நிலையேற்படும் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் (S. Viyalendiran) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத் திட்டத்திற்கமைய ஒரு இலட்சம் கல்வி பொதுத்தராதர சாதாரண தரத்தில் சித்தி பெற்றவர்களுக்கு அரச தொழில் வாய்ப்பு வழங்கும் விஷேட திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று இரண்டாம் கட்ட தொழில் வாய்ப்பாக 273 பேருக்கு தொழில் வாய்ப்பு நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நியமனக் கடிதங்களை வழங்கி வைத்து பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு - வாகரை பகுதியில் காராமுனைப்பகுதியில் ஆர்பாட்டங்களை செய்து அங்கு அத்துமீறி காணிகளை பிடித்துள்ளவர்களுக்கு சாதகமான நிலையினை தமிழ் அரசியல் தலைவர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.
பல்வேறு பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் அரச தொழில் வாய்ப்புகளை தேர்தல் வாக்குறுதிக்கமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்த மாவட்டத்திலே நிறைய பிரச்சினைகள் இருக்கின்றது.பிரச்சினைகள் தான் தேவை, தேவைகள் தான் பிரச்சினைகள். இந்த பிரச்சினைகளுக்காக இரண்டு விதமான அரசியல் தலைமைத்துவங்கள் மக்களால் தெரிவு செய்யப்படுகின்றார்கள்.அதில் ஒன்று பிரச்சினையை மாத்திரம் வைத்து அரசியல் செய்பவர்கள் இன்னொன்று பிரச்சினை இருப்பதை அறிந்து அந்த பிரச்சினைக்கான தீர்வை பெற்றுக்கொடுக்க முனைபவர்கள்.
இந்த இரண்டு விதமான அரசியல் தலைமைத்துவங்களை நாங்கள் இந்த மாவட்டத்திலும், இந்த நாட்டிலும் பார்க்கின்றோம். அது ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி, எதிர் கட்சியாக இருந்தாலும் சரி. இரண்டு விதமான பிரிவினர் இருக்கின்றார்கள்.பிரச்சினையை மாத்திரம் வைத்து அரசியல் நடத்துபவர்கள். இன்னொரு பிரிவினர் பிரச்சினையை அறிந்து அதற்கான தீர்வை வழங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.




வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி ப்ரியா - இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு வைரல்! Manithan
பிரித்தானியாவில் 181 மில்லியன் பவுண்டுகள் அலைபேசி கொள்ளைச் சம்பவம்: சிக்கிய புகலிடக் கோரிக்கையாளர் News Lankasri