கொழும்பு மாநகர மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல் - இன்று முதல் வாய்ப்பு
கொழும்பு துறைமுக நகர மரீனா நடை பயிற்சி தடாகம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், இன்று மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ, கொழும்பு துறைமுக நகருக்கு இன்று விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டு 65ஆவது ஆண்டு நிறைவையும், இரு நாடுகளுக்கிடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க இறப்பர், அரிசி ஒப்பந்தம்” கைச்சாத்திடப்பட்டு 70ஆவது ஆண்டு நிறைவையும் குறிக்கும் வகையில் இடம்பெறும் நிகழ்விலும் அவர் கலந்து கொள்ளவுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக, துறைமுக நகர நடைபயிற்சி தடாகத்திற்கு செல்ல எதிர்வரும் ஓரிரு நாட்களில் பொது மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுக நகரத்தில் ஏற்கனவே தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான படகுகள் உள்ளன. ATV (All-Terrain Vehicle) மணல் பயண சவாரி, ஜெட் ஸ்கீ நீர் விளையாட்டு, கடற்கரை பூங்கா மற்றும் பல வசதிகளுடன் கூடிய எக்வா கோல்ப் மைதானமும் பொதுமக்களின் பொழுதுபோக்கு நடவடிக்கைக்காக சேர்த்துக் கொள்ளப்படவுள்ளது.

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
