தீர்வு கிடைக்கும் வரையில் தொழிற்சங்கப் போராட்டம் தொடரும்! ஆசிரியர் சங்கம் விடாப்பிடி
தங்களுக்கான உரிய தீர்வு முன்வைக்கப்படும் வரை தமது தொழிற்சங்க போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என அதிபர்கள், ஆசிரியர்கள் சங்கங்கங்கள் தெரிவித்துள்ளன.
அதிபர்கள், ஆசிரியர்கள் சங்கங்களுக்கும், அமைச்சரவை உப குழுவுக்கும் இடையில் மீண்டும் நேற்று சந்திப்பு இடம்பெற்றது.
அதிபர்கள், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டைத் தீர்ப்பது குறித்து ஆராய்வதற்காக குறித்த அமைச்சரவை உப குழு நியமிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், அதிபர்கள், ஆசிரியர்கள் சங்கங்களுக்கும், அமைச்சரவை உப குழுவுக்கும் இடையில் நேற்றுமுன்தினம் குறித்த சந்திப்பு இடம்பெறவிருந்த நிலையில், பின்னர் நேற்று வரை பிற்போடப்பட்டிருந்தது.
இதற்கமைய, இந்தச் சந்திப்பானது நேற்று மாலை அமைச்சர் விமல் வீரவங்சவின் இல்லத்தில் இடம்பெற்றிருந்தது.
இதன்போது, அதிபர்கள், ஆசிரியர்கள் சங்கங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டன என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
அது தொடர்பான அறிக்கையை நாளை வெள்ளிக்கிழமை நிதி அமைச்சிடம் கையளிப்பதாக அமைச்சரவை உப குழு தெரிவித்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறிருப்பினும், உரிய தீர்வொன்று வழங்கப்படும் வரையில் தமது தொழிற்சங்கப் போராட்டம் இடைநிறுத்தப்படாது என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மேலும் கூறினார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan

குணசேகரன் தலைமையிலேயே பார்கவி-தர்ஷன் திருமணத்தை நடத்தும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது தெறி எபிசோட் புரொமோ Cineulagam
