பசிலின் வருகையால் தலைமறைவான மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள்
சமகால நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்காக தமது பதவியை தியாகம் செய்வதாக உறுதியளித்த சில தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைமறைவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமானம் செய்வதற்காக தங்கள் பதவிகளில் இருந்து நீங்குவதாக 3 பேர் அறிவித்திருந்தனர். எனினும் அவ்வாறு பதவி விலகாத தேசிய பட்டியல் உறுப்பினர்கள் 3 பேரும் இன்னமும் கட்சி தலைவர்களின் சந்திப்புகளை தவிர்த்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்கு வரவேண்டும் என்றால் தாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பதவியில் இருந்து விலகுவதாக கூறிய சிலர் அதற்காக பதிலளிக்காமல் இதுவரையில் தவிர்த்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டாளர்கள் வருத்தத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை வழங்குவதாக அரசாங்க தரப்பில் இருந்து வாக்குறுதி வழங்காமையினாலேயே இவர்களில் ஒருவர் பதவியை இராஜினாமா செய்யவில்லை என தெரியவந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 6 நிமிடங்கள் முன்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
