ரோஹண விஜேவீரவின் மானத்தை காப்பாற்றிய தமிழர்: நினைவுகூர்ந்த சிறீதரன்
மக்கள் விடுதலை முன்னணியில் ஸ்தாபகர் ரோஹண விஜேவீரவை யாழ்ப்பாண சிறையில் அடைத்து அவரின் ஆடைகளை களைந்த போது, அவரின் மானத்தை காக்க தான் கட்டியிருந்த துணியை எடுத்து கொடுத்தவர் இப்பகுதி தமிழரே என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
தமிழரசுக்கட்சி சார்பாக யாழில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“இன்னும் மூன்று மாதங்களில் தேர்தல் முடிவடைய, வரிசை யுகத்தை நோக்கி நாடு செல்லவுள்ளது. இன்று எரிபொருள் விலை குறையலாம்.
மக்களை ஏமாற்றும் அரசாங்கம்
ஆனால், இன்னும் ஓரிரு வாரங்களில் அவர்களின் அடுத்த நகர்வுகளை மக்கள் பார்க்கப் போகின்றனர். சீனி மற்றும் உப்பின் விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பை வரலாற்றில் பார்த்ததில்லை.
ஒடுக்குமுறைக்கு எதிரான அரகலய போராட்டத்தை நடாத்திய அரசாங்கம் இன்று மக்களுடைய வயிற்றில் அடிக்கின்றார்கள். வாக்குறுதிகளை நிறைவேற்றா விட்டால் இவர்கள் வீட்டை நோக்கி செல்ல வேண்டி வரும்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



