தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பான விடயங்களை கையாள தமிழ் தேசியப் பேரவை

Sri Lankan Tamils Vavuniya Election
By Thileepan Jun 29, 2024 11:46 PM GMT
Report

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்துவது தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக தமிழ் தேசியப் பேரவை என்னும் அமைப்பு உதயமாகியுள்ளதாக அரசியல் ஆய்வாளரும், தமிழ் மக்கள் பொதுச் சபை உறுப்பினருமான நிலாந்தன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் நேற்று (29.06.2024) வவுனியாலில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்ற தமிழ் தேசியக் கட்சிகளுக்கும் தமிழ் மக்கள் பொதுச் சபை உறுப்பினர்களுக்குமான கலந்துரையாடலின் பின் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

சிறீதரன் எம்.பியின் வீட்டை நோட்டமிட்ட மர்ம நபர்களின் பின்னணி குறித்து வெளியான தகவல்

சிறீதரன் எம்.பியின் வீட்டை நோட்டமிட்ட மர்ம நபர்களின் பின்னணி குறித்து வெளியான தகவல்

ஜனாதிபதி தேர்தல்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழ் தேசியக் கட்சிகளும், மக்கள் அமைப்பாகிய தமிழ் மக்கள் பொதுச் சபையும் இணைந்து கலந்துரையாடி ஒரு உடன்பாட்டுக்கு வந்துள்ளோம்.

அந்த உடன்பாட்டின் அடிப்படையில் கட்சிகளும், மக்கள் பொதுச் சபையும் இணைந்து ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. அந்த பொதுக் கட்டமைப்பு தமிழ் தேசிய பேரவை என அழைக்கப்படும்.

தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பான விடயங்களை கையாள தமிழ் தேசியப் பேரவை | The Tamil National Forum Emerged

தமிழ் தேசியப் பேரவையின் கூட்டம் எதிர்வரும் 6 ஆம் திகதி இடம்பெறும். இக் கூட்டத்தில் உத்தியோக பூர்வமாக புரிந்துணர்வு உடன்படிக்கை கட்சிகளுக்கும், மக்கள் அமைப்புக்கும் இடையில் கைச்சாத்திடப்படும்.

அதன் பின் தேவையான உப குழுக்களை உருவாக்கி ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பொது தமிழ் வேட்பாளரை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் செயல் பூர்வமாக முன்னெடுக்கப்படும். தமிழ் தேசியப் பேரவை என்னும் பொது கட்டமைப்பு தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பான விடயங்களை கையாள தமிழ் தேசியப் பேரவை | The Tamil National Forum Emerged

அந்த பொதுக் கட்டமைப்பு உப கட்டமைப்புக்களை உருவாக்கும். அதில் ஒன்று யார் தமிழ் பொது வேட்பாளர் என்பதை கண்டு பிடிக்கும். இன்னுமொரு உப கட்டமைப்பு தேர்தல் அறிக்கை என்ன என்பரைத இறுதி செய்யும் என குறிப்பிட்டுள்ளார்.

மொட்டுக்கட்சியின் பிரதமர் வேட்பாளராக நாமல் ராஜபக்ச: உதயங்க வீரதுங்க

மொட்டுக்கட்சியின் பிரதமர் வேட்பாளராக நாமல் ராஜபக்ச: உதயங்க வீரதுங்க

பெரும்பான்மையான கட்சிகள் 

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் கருத்து தெரிவிக்கையில், தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயத்தில் தமிழ் தேசிய அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புக்களும் ஒன்று கூடி தங்களை ஒரு அமைப்பாக பிரகடனப்படுத்தியுள்ளார்கள்.

தற்போது இரு தரப்பும் ஒன்றிணைந்து ஒரே அமைப்பாக தமிழ் தேசிய பேரவையாக செயற்பட இணங்கியுள்ளன. வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு - கிழக்கு சார்ந்து தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதாக தீர்மானித்துள்ளோம்.

தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பான விடயங்களை கையாள தமிழ் தேசியப் பேரவை | The Tamil National Forum Emerged

அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வதற்கான திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் பின் தேவையான குழுக்கள் நிறுவப்படும். அந்த கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டு பொது வேட்பாளர் விடயம் கையாளப்படும்.

அந்த வகையில் இது ஒரு முக்கியமான கூட்டம். தமிழ் தேசியப் பரப்பில் பெரும்பான்மையான கட்சிகள் இதில் அங்கத்துவம் பெற்றுள்ளன. பொதுகட்டமைப்பான தமிழ் தேசிய பேரவை தான் இனி பொது வேட்பாளரை தெரிவு செய்யும்.

தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பான விடயங்களை கையாள தமிழ் தேசியப் பேரவை | The Tamil National Forum Emerged

தேர்தல் பிரசாரத்தையும் அதுவே முன்னெடுக்கும். தமிழ் தேசியப் பேரவையின் உறுப்பினர்கள் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவர். இது அரசியல் மயப்படுத்தப்பட்ட விடயம் தான். எதிர்வரும் 6 ஆம் திகதிக்கு பின் உத்தியோக பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

இதில், தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), தமிழ் மக்கள் தேசியக் கூட்டனி, தமிழ் தேசியக் கட்சி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி (ஈபிஆர்எல்எப்), தமிழ் தேசிய பசுமை இயக்கம், ஜனநாயக போராளிகள் கட்சி என்பன அங்கத்துவம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கச்சதீவில் சில செயற்பாடுகளை இந்தியா முன்னெடுக்க இலங்கை இடம் கொடுத்துள்ளது: சி.வி.விக்னேஸ்வரன்

கச்சதீவில் சில செயற்பாடுகளை இந்தியா முன்னெடுக்க இலங்கை இடம் கொடுத்துள்ளது: சி.வி.விக்னேஸ்வரன்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW


1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US