7 தமிழர்களின் விடுதலை தமிழக ஆளுநரின் அறிவிப்பில் தங்கியுள்ளது.
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை தொடர்பில் தண்டனைப் பெற்ற 7 தமிழர்களின் விடுதலை தொடர்பாக ஆளுநரிடம் தமிழக அரசாங்கத்திடம் மீண்டும் வலியுறுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் ராமதாஸ் கோரியுள்ளார்.
இதுகுறித்து ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் “பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலை விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டியது தமிழக ஆளுநரே அன்றி, இந்தியக் குடியரசுத் தலைவர் அல்ல” என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதனை உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கும் கருத்துகள் மீண்டும் ஒருமுறை இதனை உறுதி செய்துள்ளன என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலை குறித்து முடிவெடுப்பதில் தமிழக ஆளுனர் காலதாமதம் செய்வது ஏற்கத்தக்கதல்ல என்று உயர்நீதிமன்றம் நேற்று தெரிவித்திருந்தது.
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் மற்றும் 6 தமிழர்கள் 31 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்
அவர்களில் பேரறிவாளன் எந்தக் குற்றமும் இழைக்கவில்லை; அவரது வாக்குமூலத்தை திரித்து எழுதியதால் தான் அவர் தண்டிக்கப் பட்டார் என்று வழக்கின் விசாரணை அதிகாரியான தியாகராஜன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
எனவே 7 தமிழர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு விட்ட நிலையில், தண்டனைக் காலம் முடிவடைந்த பிறகும் விடுதலை செய்வதற்கு மறுப்பது எந்த வகையிலும் நியாயமில்லை.
அவர்களுக்கு இழைக்கப்படும் மனித உரிமை மீறல் நீடிப்பது அனுமதிக்கக்கூடாது என்றும் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.