தமிழ்நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் 19வது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் (Photos)
தமிழ்நாடு - திருச்சி ஈழத்தமிழர் சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் இன்று 19வது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சி சிறப்பு முகாமிலிருந்து திருச்சி அரச மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டவர்கள் அனைவரும் நேற்றிரவு முதல் அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து சாதாரண விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

உடல்நிலை பாதிப்புற்ற நிலையிலும் தொடரும் போராட்டம்
எனினும் அவர்கள் தங்களுடைய உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடவில்லை என தெரியவருகிறது.
இந்நிலையில் இதுவரை தமிழக முதலமைச்சர் சார்பாகவோ அல்லது அரச அதிகாரிகள் சார்பாகவோ போராட்டத்தில் ஈடுபடுபவர்களுடன் எந்தவித பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
இன்று 19வது நாளாகப் போராட்டம் தொடர்வதால் அவர்களின் உறவுகள் மிகுந்த கவலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

 
    
     
    
     
    
     
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        