ஹிஷாலினியின் மரணத்துக்கு நீதிக்கோரி போகாவத்தை பகுதியில் போராட்டம்
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்து தீக்காயங்களுடன் மரணமடைந்த சிறுமி ஹிஷாலினியின் மரணத்துக்கு நீதி வேண்டும் எனக் கோரி கொட்டகலை, போகாவத்தை நகரத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பிரதேச மக்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் இணைந்து சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பதாதைகளை ஏந்தியவண்ணம் கோஷங்களை எழுப்பியவாறு குறித்த போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
மேலும் நாடு முழுவதும் உள்ள சிறுவர் மற்றும் சிறுமிகள் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். அவர்கள் பணி செய்யும் பகுதிகளில் பல்வேறு துஷ்பிரயோகங்களிற்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே இதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். குறிப்பாக ஹிஷாலினியின் மரணத்துக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட்டு, நீதி நிலைநாட்டப்பட்ட வேண்டும்.
மேலும் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துகின்ற தரகர்களுக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்” என போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.






ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
