வீடு வசதி இல்லாமல் வாழும் அனைத்து மக்களுக்கும் வீடு - யாழில் ஜனாதிபதி
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வீடு வசதி இல்லாமல் வாழும் அனைத்து மக்களுக்கும் வீட்டு வசதியை பெற்றுக் கொடுப்பதே எமது நோக்கமாகும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், சாவகச்சேரி மீசாலை வீரசிங்கம் ஆரம்பப் பாடசாலை மைதானத்தில் நேற்றையதினம் (16.01.2026) வீட்டுத் திட்ட மானியத்திற்கான காசோலைகள் வழங்கும் ஆரம்ப நிகழ்விலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
யுத்த காலத்தில் முரண்பாடுகளுக்கு மத்தியில்
நாட்டில் முதல் முறையாக வட மாகாண மக்கள் நம்பிக்கை செலுத்தக்கூடிய வகையில் ஒரு அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது எனவும், முதலாவதாக மிகவும் கீழ் மட்டத்தில் உள்ள மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் எமது அரசாங்கம் அவர்களுக்கு தேவையான அனைத்தையும் நிவர்த்தி செய்யும் எனவும் தெரிவித்தார்.

மேலும், வரவு செலவு திட்டத்தின் ஊடாக கல்விக்காக அதிக நிதியை இம்முறை ஒதுக்கியுள்ளதாகவும், மக்களுக்கு ஒரு சிறந்த வருமான வழியை ஏற்படுத்த வேண்டும் எனவும், விசேடமாக யாழ்ப்பாணத்தில் விவசாயத்துறை, சுற்றுலாத்துறை , கடற்றொழிற்துறை மற்றும் சிறு கைத்தொழில் துறை போன்றன இப் பகுதி மக்களுடைய வாழ்வாதாரமாக இருக்கின்றன எனவும், இவ் அனைத்து துறையையும் மேம்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
யுத்த காலத்தில் முரண்பாடுகளுக்கு மத்தியில் மக்கள் இனவாதத்துடன் வாழ்ந்தனர், இந்த முரண்பாட்டின் ஊடாக எவருமே நன்மை அடையவில்லை எனவும் மாறாக பாதிப்புக்கள் மட்டுமே மிஞ்சின எனவும் குறிப்பிட்டார்.
சக்தி வாய்ந்த சுற்றுலாத்தலம்
இதே போன்று சுற்றுலாத்துறையை எடுத்துக் கொண்டால் எமது நாட்டிற்கு பெரிய பங்களிப்பை இந்த சுற்றுலாத்துறை வழங்குகின்றது

வடக்கில் அழகிய கடற்கரைகள் மக்களை கவரக்கூடிய பல இடங்கள் இருந்தாலும் சக்தி வாய்ந்த சுற்றுலாத்தலம் ஒன்று இங்கு இல்லை எனவும், இதன் குறைபாடுகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும், இங்குள்ள விமான நிலையத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு எம்மால் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மிக வேகமாக காங்கேசன்துறை துறைமுகத்தை புனரமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.
வட மாகாணத்தில் சிறந்த சுற்றுலாத் தலம் ஒன்றை அமைப்பது எமது தேவையாக உள்ளது எனவும், இளைஞர் யுவதிகளுக்கு சிறப்பான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும், நல்ல ஒரு பொருளாதாரத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும், அவ்வாறான பொருளாதாரத்தை அமைத்துக் கொடுக்கும் பொறுப்பாக எமது அரசாங்கம் செயற்பட உள்ளதாகவும் தெரிவித்ததார்.
மேலும், இதற்கு மேலாக எனது நோக்கம் சிதறடிக்கப்பட்ட மனங்கள் மற்றும் உள்ளங்களை ஒன்று சேர்க்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் அடுத்து வரப்போகும் கதைக்களம்... வீடியோவுடன் இதோ Cineulagam
கோமதியிடம் அடுத்த குண்டை தூக்கிப்போட்ட மீனா, இனி நடக்கப்போவது என்ன... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri