ஹிசாலினிக்கு நீதி கோரி இன்றும் போராட்டம்
உயிரிழந்த டயகம பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ஹிசாலினியின் மரணத்திற்கு நீதி கோரி இன்றும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் , சிறுமி ஹிசாலிணியின் பிரேத பரிசோதணை சட்டரீதியாகவும் முறையாகவும் இடம்பெற்று அவரின் உயிரிழப்புக்கு சரியான நீதி கிட்ட வேண்டும், மலையகத்தின் எதிர்கால சிறுவர்களின் உயிர் மற்றும் உரிமை பாதுகாப்புக்கு சிறுமி ஹிசாலினியின் மரணம் ஒரு ஒளியை வழங்க வேண்டும், சிறுமியின் ஆத்மா சாந்தியடைய வேண்டும், அவரின் பெற்றோர்களின் வேண்டுகோளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து, இன்று காலை நுவரெலியா மாவட்டத்தில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
அதனடிப்படையில், பூண்டுலோயா நகரில் பூண்டுலோயா தோட்ட மக்கள், இன்று காலை ஒருமணி நேரம் தமது போராட்டத்தை முன்னெடுத்தனர். பதாதைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பி பூண்டுலோயா நகரில் ஊர்வலமாக சென்றனர்.




துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சினேகா! வெளியிட்டுள்ள உணர்வுபூர்வ பதிவு வைரல்! Manithan