ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கதையை ஏற்றுக்கொள்ள முடியாது - எஸ்.எம். மரிக்கார்
20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்காக அரசாங்கத்திற்கு ஆதரவளித்தமை சம்பந்தமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தற்போது முன்வைக்கும் கதை ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
கோவிட் தொற்றால் இறப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்ற உறுதிமொழிக்கு அமையே 20வது திருத்தச் சட்டத்தை ஆதரித்ததாக முஸ்லிம் காங்கிரஸ் கூறியுள்ளது.
கோவிட் மரணங்கள் மற்றும் 20வது திருத்தச் சட்டம் என்பன இருவேறு விடயங்கள். கோவிட் மரணங்களை அடக்கம் செய்வது தொடர்பான விடயத்தில் 20வது திருத்தச் சட்டத்தை பயன்படுத்த வேண்டாம் என நாங்கள் முஸ்லிம் காங்கிரஸூக்கு கூற விரும்புகிறோம்.
இது நாடகம். இரண்டு தலைவர்கள் எதிர்க்கட்சி வரிசை இருக்கும் போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இப்படி நடக்க முடியாது. அவர்களுக்கு மீண்டும் மன்னிப்பு கிடையாது.
முஸ்லிம் மக்களையும் நாட்டை நேசிப்பவர்களாக இருந்தால், அரசியலையும் சமயத்தையும் ஒன்றாக இணைத்துக்கொள்ள வேண்டாம் என நாங்கள் கோருகிறோம் எனவும் மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

இந்தியாவில் Audi A9 காரை வைத்துள்ள ஒரே பெண்! நீதா அம்பானியின் விலையுர்ந்த கார் கலெக்ஷன் இதோ News Lankasri

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
