பிரித்தானியாவை உலுக்கிய கத்திக்குத்து சம்பவம்

K. S. Raj
in ஐக்கிய இராச்சியம்Report this article
பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள கத்திக்குத்து தாக்குதலில் பெண் ஒருவர் உயிரிழந்து இருப்பதுடன், இரண்டு பேர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் போராடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரித்தானியாவின் மான்செஸ்டரில் நேற்று(19) நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 43 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் விசாரணைகள்
குறித்த தாக்குதலில் 17 வயதுடைய சிறுமி மற்றும் 64 வயது முதியவரும் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆரம்பக்கட்ட விசாரணையில், குற்றவாளியும், பாதிக்கபட்டவரும் ஒருவரை ஒருவர் அறிந்தவர்களாக இருக்கலாம் என்றும், இது தனிப்பட்ட சம்பவம் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கோர்டன்(Gorton) பகுதியில் உள்ள Barnard சாலையில் இந்த சம்பவம் இடம்பெற்ற நிலையில், அப்பகுதியில் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 22 வயது இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan
