இஸ்ரேலில் திடீர் குண்டுவெடிப்பு: தாக்குதல் தொடர்பில் எழுந்துள்ள சந்தேகம்
இஸ்ரேலின்(Israel) டெல் அவிவ் நகரில் ஹலேஹி தெருவில் திடீர் குண்டுவெடிப்பு ஒன்று நடந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பயங்கரவாத தாக்குதல்
இது தொடர்பில் மாவட்ட தளபதி பெரிட்ஜ் அமர் கூறும்போது, உயிரிழந்த நபர் வெடிகுண்டு ஒன்றை சுமந்து சென்றிருக்க கூடும் என நம்பப்படுகிறது.
குண்டுவெடிப்பில் பலியான நபர் யாரென பொலிஸார் இன்னும் அடையாளம் காணவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும், இந்த சம்பவம் பயங்கரவாத தாக்குதலா? என முழு விசாரணைக்கு முன்பே கூற முடியாது. எனினும், வெடிகுண்டால் இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளது என அவர் உறுதிப்படுத்தி உள்ளார்.
இந்நிலையில் அந்நபரை அடையாளம் காண்பது மிக முக்கியம் என்றும் அமர் குறிப்பிட்டுள்ளார்.
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan