உக்ரேனிய பிரஜைகளை நெகிழ வைத்த இலங்கை மக்கள்
இலங்கைக்கு சுற்றுலா பயணிகளாக வருகை தந்துள்ள உக்ரேனிய பிரஜைகள் பெரும் நெருக்கடி நிலைக்கு முகங்கொடுத்துள்ளனர்.
அவர்களின் திட்டமிட்ட கால எல்லையை நிறைவு செய்துள்ள போதிலும், அங்கு நடக்கும் யுத்தம் காரணமாக நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
உக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு இன்று ஐந்தாவது நாளாகவும் தொடர்கிறது. இந்நிலையில் பல நாடுகளில் உக்ரேன் சுற்றுலா பயணிகள் நாடு திரும்ப முடியாத நிலையில் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கைக்கு வந்துள்ள பெருமளவு உக்ரேனிய சுற்றுலா பயணிகள் பணம் இல்லாமல் தமது ஹோட்டல் அறைகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.
பலர் இலங்கையர்களின் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவ்வாறு வெளியேறியவர்களுக்கு தேவையான உணவுகளை மக்கள் வழங்கி வருவதாக தெரிய வருகிறது.
இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சு இது குறித்து போதிய கவனம் செலுத்தவில்லை என உனவட்டுன பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இக்கட்டான நிலையில் இலங்கை மக்களின் அன்புக்கு நன்றி தெரிவிப்பதாக உக்ரேனிய பிரஜைகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த நாட்களாக எங்களுக்கு தூக்கம் வரவில்லை. எங்கள் விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளது.. நாங்கள் உதவி கேட்டோம் ஆனால் அது வெற்றிபெறவில்லை. எங்களால் எந்த தகவலையும் பெற முடியவில்லை, நாங்கள் நம்பிக்கையற்ற ஒரு சூழ்நிலையில் இருக்கிறோம் என உக்ரேன் சுற்றுலா பயணி ஒருவர் தெரிவித்துள்ளனர்.
போரும் வன்முறையும் நல்லதல்ல நான் உக்ரேனியனாக இருந்தாலும் என் மனைவி ரஷ்ய நாட்டவராகும்.. போர் தொடர்ந்தால் அதன் விளைவுகளை இருவரும் அனுபவிக்க வேண்டி வரும். எனவே போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
தங்குமிட வசதி கிடைக்காமல் தவிக்கும் உக்ரைனியர்களுக்கு இலவச தங்குமிட வசதிகளை வழங்க பலர் முன்வந்து எமது செய்தி சேவைக்கு அவர்களது தொடர்பு இலக்கங்களை பகிந்துள்ளனர்.
உங்களுக்கும் தெரிந்த உக்ரேனியர்கள் இவ்வாறு உதவியை நாடியிருந்தால் கீழ்காணும் தொடர்பு இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு உதவி செய்யுங்கள்.
அதேபோன்று நீங்களும் அவர்களுக்கு உதவ விரும்பினால் எம்மை தொடர்புகொண்டு,
செய்ய விரும்பும் உதவி :
நீங்கள் இருக்கும் பிரதேசம் :
தொடர்பு இலக்கங்கள் :
போன்றவற்றை எமது ஊடகத்தினூடாக பொதுமக்களுக்கு பகிர்ந்துகொள்ளுங்கள்.
தொலைபேசி இலக்கம் +94 113144210 |
உதவ முன்வந்துள்ளவர்கள்
களுத்துறை மாவட்டம் -: 5 படுக்கையறைகள் கொண்ட வீடு தொலைபேசி எண்கள் - +94 77 235 7656
வாட்ஸ்அப் எண் - +94 77 353 1693 |
காலி மாவட்டம் -: ஒற்றை அறை உக்ரைன் ஒரு ஜோடிக்கு மட்டுமே
தொலைபேசி எண்கள் - 74 094 3005 |
களுத்துறை மாவட்டம் -: சுசந்த பெர்னாண்டோ பயாகல வடக்கு இரண்டு உக்ரேனியர்களுக்கு மட்டுமே ஒரு வாரத்திற்கு மட்டுமே தொலைபேசி இலக்கங்கள் - 0760 381 701
விசாரணைகள் - http://www.airbnb.com/rooms/525843 |
கண்டி மாவட்டம் -: இலவச தங்குமிடம் (2 அறைகள்) உக்ரேனியர்களுக்கு. முகவரி - S.P. dissanayake 47, Regency Height, Maligatenna, Gurudeniya, Kandy. தொலைபேசி இலக்கங்கள் - +94778646902 +94717108129 கண்டி மாவட்டம் - நாவலப்பிட்டி (இரு படுக்கை அறைகள்) தொலைபேசி இலக்கம் - 0776725225 |
மட்டக்களப்பு மாவட்டம் - தாழங்குடாவில் இலவச தங்குமிடம் (உணவுடன் - குடும்பமொன்றுக்கு) தொலைபேசி இலக்கம் - +94 77 932 2755 (Sritharan) |
கொழும்பு மாவட்டம் - mount laviniya (Annex) (Family or couples) தொலைபேசி இலக்கம் - +971 56 584 0644 |