அநுர அரசால் மூடப்பட்ட சபாநாயகரின் அதிகாரப்பூர்வ இல்லம்!
நாடாளுமன்ற உறுப்பினர்களின் கௌரவத்தை ஆளும் தரப்பே இல்லாதொழித்துள்ளது என்றும், நாட்டின் மூன்றாம் பிரஜையான சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு செல்ல முடியாத நிலை உள்ளது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டியள்ளார்.
மேலும், சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லம் மூடப்பட்டுள்ளது என தெரிவித்த அவர், எளிமையாக செயற்படுகிறோம் என்று குறிப்பிட்டுக் கொண்டு மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை அரசாங்கம் தோற்றுவிக்க வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நாடாளுமன்றில் கருத்து தெரிவித்த அவர்,
ஓய்வூதிய கொடுப்பனவு
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவை இரத்துச் செய்ய வேண்டும் என்று குறிப்பிடுபவர்கள் தமக்குரிய அனைத்து கொடுப்பனவுகளையும் பெறுகிறார்கள்.
கொடுப்பனவுகளை இரத்துச் செய்ய வேண்டும் என்று கூச்சலிடுவதற்கு முன்னர் சித்ரசிறி அறிக்கையின் பரிந்துரைகளை படித்துப் பாருங்கள்.
ஆகவே கொண்டு வரும் புதிய சட்டமூலம் கடந்த காலத்துக்கு செல்வாக்கு செலுத்தாது. ஆகவே ஆளும் தரப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
புதிய சட்டமூலம்
அவர்களும் ஓய்வூதிய கொடுப்பனவுகளை பெறுவார்கள். ஆகவே புதிய சட்டமூலத்துக்கு கைகளை மாத்திரமல்ல, இரண்டு கால்களை உயர்த்தி ஆதரவு வழங்கினாலும் உங்களுக்கு (ஆளும் தரப்பு) எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
தேசிய மக்கள் சக்தியிள் 159 பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் முழுமையான காசோலையில் மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி காரியாலயத்துக்கு செல்கிறது.
அங்கிருந்து தான் இவர்களுக்கு சம்பளம் கிடைக்கிறது. இதை இலஞ்சம் என்றே குறிப்பிட வேண்டும்.
ஆகவே வெளிப்படையாக செயற்படுகிறோம் என்று மக்கள் மத்தியில் குறிப்பிட்டுக் கொண்டு மக்களை ஏமாற்றாதீர்கள்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |