ரணிலின் முன்மொழிவுகளை நிராகரித்த சபாநாயகர்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவினால், நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளை சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன நிராகரித்துள்ளார்.
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் நேற்றைய தினம் மன்றில் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் சில திருத்தங்களுடனான முன்மொழிவுகளை ரணில் விக்ரமசிங்க அவையில் முன்வைத்தார்.
எனினும், இந்த முன்மொழிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் பிரதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் உள்ளடக்கங்களுக்கு ரணிலின் முன்மொழிவுகள் பொருத்தப்பாடுடையதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு பதிலாக ரணில் ஒட்டுமொத்த அமைச்சரவைக்கு எதிராகவும் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென ரணில் முன்மொழிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri