ஊடகவியலாளரின் வீட்டின் மீதான தாக்குதலை கேலி செய்துள்ள பொலிஸ் அமைச்சரின் மகன்
ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவின் வீட்டின் மீது நடத்தப்பட்ட கல் மற்று மல கழிவு வீச்சு தாக்குதலை கேலி செய்யும் வகையில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் மகன் தனது முகநூலில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
“கற்கள் மற்றும் மல கழிவுகளை அவமதித்தவர்களை கண்டிப்போம்” என சிங்களத்தில் அவர் இந்த பதிவை இட்டுள்ளார். அமைச்சர் வீரசேகரவின் மகன் சசித்திர வீரசேகர, பொலிஸ் திணைக்களத்தில் ஒரு மருத்துவராக கடமையாற்றி வருகிறார்.

இலங்கையில் பிரதான தொலைக்காட்சி செய்திகளில் தலைப்புச் செய்தியாக வெளியிடப்பட்ட சம்பவத்தையே அவர் கேலி செய்துள்ளதுடன் இந்த சம்பவம் தொடர்பில் மக்களின் மனங்களில் ஏற்பட்டுள்ள உணர்வுகளையே அமைச்சர் வீரசேகரவின் மகன் கேலி செய்துள்ளமை சம்பவத்தை அலட்சியமாக புறக்கணிக்கும் செயல் என பல தரப்பினர் ஆதங்கத்தை வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அதனுடன் தொடர்புடைய குற்றவாளிகளை சட்டத்திற்கு முன் நிறுத்துமாறு பொலிஸாரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலைமையில், பொலிஸ் திணைக்களத்தின் மருத்துவ பொலிஸ் அதிகாரியான சசித்திர வீரசேகர இவ்வாறான பதிவை இட்டுள்ளமை விசனத்திற்குரியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமுதித்த சமரவிக்ரம, சமூக ஊடகங்கள் மூலம் வெளியிட்ட ஊழல், மோசடிகள் மற்றும் ஏனைய பிரச்சினைகள் சம்பந்தமான நேர்காணல் ஒளிப்பரப்புகள் , பிலியந்தலையில் உள்ள அவரது வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு காரணம் என ஊகிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் அமைச்சர் வீரசேகரவின் மகன், தனது முகநூல் பதிவை தற்போது நீக்கியுள்ளார்.

இந்த புகைப்படம் கொழும்பில் நடந்த வைபவம் ஒன்றின் போது அமைச்சர் வீரசேகரவின் புதல்வர், அமைச்சருக்கு சல்யூட் அடித்து மரியாதை வழங்கும் காட்சி
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam