வல்வெட்டித்துறையில் மாணவர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வு(Photos)
வல்வெட்டித்துறையில் கல்வி திறன் நயப்பு விழா நேற்று முன்தினம் (22.07.2023) இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வு வல்வெட்டித்துறை உல்லாச விடுதி ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது கம்பர்மலை வித்தியாலயம-கொம்மந்தறையில் கல்விகற்று 2018ஆம் ஆண்டு ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளை பெற்று தகைமை அடைந்த மாணவன் திலீபன் வரோதயன் மற்றும், க.பொ.த. சாதாரணதர பரீட்சையில் ஒன்பது “ஏ” சித்தி பெற்ற மாணவி மதுரா ஆகியோர் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
விருது வழங்கும் நிகழ்வு
இவ்விருது வழங்கும் நிகழ்வு வடமாகாண முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளரும், உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியின் முன்னாள் அதிபருமான ந.அனந்தராஜின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
மிக்குயர் திறனாளர்களை பதிவேற்றம் செய்யப்பட்ட “பூபாளராகங்கள்10” புத்தகப்பொதியும் பூபாளராகங்கள் பதக்கங்களும் மாணவி மதுராவுக்கு மற்றும் மாணவன் திலீபன் வரோதயனுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் முன்னாள் உப தலைவர் மகாலிங்கம் அவர்களால் பொற்கிழி வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
விருது வழங்கும் நிகழ்ச்சியில் நிறைவாக பூபாள ராகங்கள் நினைவாக “சாதனையாளர் கேடயம்” நடராஜா அனந்தராஜால் வழங்கப்பட்டது.
இவ் விருதுகளையும்,பொற்கிழியையும் பெற்றுக் கொண்டமைக்கான ஏற்புரைகள் இரு சாதனை மாணவர்களாலும் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, கோகிலவர்த்தனியால் நன்றியுரை வழங்கப்பட்டது.









இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan
