கால்நடை வைத்தியர் இல்லாமையினால் உற்பத்தியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு(Video)
ஹட்டன் - மஸ்கெலியா பகுதியில் மிருக வைத்தியர் இல்லாமையால் பசும்பால் உற்பத்தியாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
மஸ்கெலியா பகுதியில் சுமார் 2500 அதிகமானவர்கள் பசும்பால் உற்பத்தியில் ஈடுபட்டு வருவதாகவும் நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் லீற்றர் பசும்பால் உற்பத்தி செய்யப்படும் என்றும் குறிப்பிடப்படுகின்றது.
இது குறித்து, மஸ்கெலியா பகுதியில் நிரந்தர மிருக வைத்தியர் ஒருவர் இல்லாமையினால் பசும்பால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விசனம் தெரிவித்துள்ளனர்.
கால்நடைகளுக்கு ஆபத்து
பண்ணை தொழில் ஆயிரக்கணக்கானவர்கள் ஈடுபட்டு வரும் நிலையில் மிருக வைத்தியர் இல்லாமையினால் கால்நடைகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மஸ்கெலியா அரசாங்க கால்நடை வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் பசும்பால் உற்பத்தியில் சுமார் 2500 பேர் இருப்பதாகவும் ஆடு கோழி வளர்ப்பாளர்கள் சுமார் 2000 பேர் வரை தங்களுடைய ஜீவன உபாயமாக செய்து வருவதாகவும் 2500 குடும்பங்கள் இந்த பசும் உற்பத்தியே நம்பி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இப்பிரதேசத்தில் சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாக மிருக வைத்தியர் ஒருவர் இல்லாததன் காரணமாக கால்நடை உற்பத்தியில் ஈடுபட்டு வருபவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
வைத்தியர் இடமாற்றம்
இதற்கமைய கடமையில் ஈடுப்பட்டிருந்த மிருக வைத்தியர் மாற்றம் பெற்று சென்றதனையடுத்து குறித்த பகுதியில் நிரந்தர மிருக வைத்தியர் ஒருவர் இல்லை.
வாரத்திற்கு இரண்டு நாள் மாத்திரம் தலவாக்கலை பகுதியிலிருந்தே ஒரு மிருக
வைத்தியர் குறித்த பிரதேசத்திற்கு பதில் கடமையாற்றுவதற்காக நியமிக்கப்பட்டுள்ளார்.
எனினும் நாளாந்தம் தங்களுடைய பசுக்களுக்கு சுகயீனம் ஏற்படும் போது உரிய நேரத்தில் சிகிச்சையளிக்காததன் காரணமாக பல பசுக்கள் இறந்து போயும் பல பசுக்கள் நோய்வாய்ப்பட்டும் காணப்படுகின்றது.
இந்த பசுக்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு ஹட்டன் பகுதியிலிருந்தோ, அல்லது நுவரெலியா பகுதியிலிருந்து வரவழைக்க வேண்டிய நிலை உள்ளது.
உற்பத்தியாகும் பொருட்கள்
இதனால் கால் நடைகளுக்கு வைத்தியம் பார்ப்பதற்கு பெரும் தொகை பணம் செலவிட வேண்டியுள்ளதாகவும்,உரிய நேரத்தில் கால்நடைகளுக்கு வைத்திய ஆலோசனைகளையும், சிகிச்சைகளையும் அளிக்க முடியாததன் காரணமாக சுமார் 4500 இற்கும் குடும்பங்கள் நெருக்கடியான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இது குறித்து பால் சேகரிக்கும் நிலையத்தின் உரிமையாளர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில் நான் சுமார் 300 இற்கும் அதிகமான பசும்பால் உற்பத்தியாளரிடம் இருந்து பசும்பாலை பெற்று இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறேன்.
அவர்களின் குடும்பங்கள் இந்த பால் உற்பத்தியினை நம்பிதான் வாழ்ந்து வருகின்றனர் ஒருசிலர் ஓரிரு மாடுகளையும் இன்னும் சிலர் 10 இற்கும் மேற்பட்ட மாடுகளையும் வைத்து தான் தொழில் செய்து வருகின்றனர்.
இதன்போது நாள் ஒன்றுக்கு சுமார் 15000 லீற்றர் பசும் பால் உற்பத்தி செய்யப்படுகிறதுடன் நான் மாத்திரம் 300 பேரிடமிருந்து 3000 லீற்றருக்கும் அதிகமான பசும்பாலை பெற்று தொழிலில் ஈடுப்பட்டு வருகின்றேன்.
இந்த பசும் பால் மூலம் பால்,தயிர்,யோகட், ஐஸ்கிரீம் (பனிக்கூழ்) போன்றவற்றை தயார் செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறேன்.
அத்துடன் என்னிடம் சுமார் 40 பேர் வேலை செய்கின்றனர் இவர்களின் குடும்பம் இதனை நம்பி தான் இருக்கின்றனர்.
என்னிடமும் சுமார் 15 இற்கும் அதிகமான பசுக்கள் உள்ளன.அவற்றிக்கு சுகயீனம் ஏற்படும் போது பெரும் தொகையான பணத்தினை செலவு செய்துதான் வைத்தியம் பார்க்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.
பிரச்சினைக்கு உடன் தீர்வு வழங்கல்
இதனால் பால் உற்பத்தி பாதிக்ககூடிய நிலை காணப்படுகின்றது,எனவே இது குறித்த உரிய அதிகாரிகள் கவனமெடுத்து இந்த பிரச்சினைக்கு உடன் தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பலரும் தங்களுக்கு பால் உற்பத்தி செய்வதற்கு மிகப்பெரும் தடையாகவும் பாதிப்பாகவும் காணப்படுவது மிருக வைத்தியர் இல்லமையும்,மருந்து மற்றும் மிருக உணவுகளின் விலையேற்றமும் என தெரிவிக்கின்றனர்.
இதனடிப்படையில் அரசாங்கம் உரிய நடவடிக்கையினை மேற்கொள்வதன் மூலம் இந்த துறையின் மூலம் நாட்டிக்கு வீட்டிக்கு பாரிய அளவில் பங்களிப்பு செய்ய முடியும்.
தொழில் வாய்ப்புக்கள்
இதன் மூலம் பலருக்கு தொழில்களை பெற்றுக்கொடுத்து வருமானத்தினையும் பொருளாதாரத்தினை பெற்றுக்கொடுக்க முடியுமென இவர்கள் தெரிவித்துள்ளனர்.
எது எவ்வாறான போதிலும் தற்போது நாடு முகம் கொடுத்துள்ள நிலையிலிருந்து விடுபடுவதற்கு நாட்டின் உற்பத்தி துறைகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்ப்பார்ப்பாகும்.
இவ்வாறான தேசிய உற்பத்திக்கு பங்களிக்கும் தொழில் துறையினை பாதிக்கும் விடயங்களில் உரியவர்கள் கவனமெடுக்காத பட்சத்தில் இந்த துறைகள் பாதிக்கப்பட்டு பலர் தொழில் வாய்ப்புக்களை இழக்கக்கூடும்.
இதனால் இவ்வாறான துறைகளை அதிக கவனமெடுத்து அபிவிருத்தி செய்வதன் மூலமே ஒரு நாடு அபிவிருத்தி காணும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

முதன்முறையாக தனது மகளின் முகத்தை காட்டி போட்டோ வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகா.. செம ஸ்டில்ஸ் Cineulagam

2 முறை யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி.. முதலில் ஐபிஎஸ் ஆகி பின்னர் ஐஏஎஸ் அதிகாரியான நபர் யார்? News Lankasri

தமிழ் புத்தாண்டு இந்த 3 ராசியினரை கோடீஸ்வரராக மாற்றப்போகுதாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

Super singer மேடையில் யாழ்ப்பாணத்து குயில்- இறுதிச்சுற்றிக்கான பாடலா? இமான் பதிலால் குஷியான அரங்கம் Manithan
