செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : நீதி அமைச்சர் வெளிப்படுத்திய விடயம்
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் சர்வதேச தொழில்நுட்ப ஒத்துழைப்பு பெறப்படும். ஏனெனில் உண்மையைக் கண்டறிவதற்கு இது முக்கியம் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பான விசாரணைக்கு சர்வதேச ஒத்துழைப்பு பெறப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்றது.
இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச தொழில்நுட்ப உதவி
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு நடவடிக்கைக்குத் தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

எமக்கு சில விடயங்களில் ஆய்வு கூட வசதி இல்லை. எமது நாட்டு பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட வேண்டும். எமக்கு உண்மையை கண்டறிவதுதான் முக்கியம்.
தொழில்நுட்ப உதவியும் தேவைப்படுகின்றது. எனவே, சர்வதேச தொழில்நுட்ப உதவி பெறப்படும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜீ தமிழ் சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி... மெகா சங்கமம், எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
மேக்ரான் அணிந்திருந்த சன்கிளாஸ்... ஒரே நாளில் பல மில்லியன் டொலர் தொகையைக் குவித்த நிறுவனம் News Lankasri
ஆரம்பமாகும் குருபெயர்ச்சி... 48 நாட்களில் பொற்காலத்தை சந்திக்கும் ராசி யார் யார்னு தெரியுமா? Manithan