வடக்கு கடற்பரப்பின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
இலங்கையின் வடக்கு கடற்பரப்பின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படையினர் அறிவித்துள்ளனர்.
இந்தியாவில் நிலவி வரும் கோவிட் பெருந்தொற்று நிலைமைகளினால் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கோவிட் பெருந்தொற்று தீவிரமடையும் நிலையில் இந்தியர்கள் அண்டை நாடுகளுக்கு தப்பிச் செல்ல முயற்சிப்பதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்துள்ளார்.
எனவே வடக்கு எல்லைப் பகுதியை பாதுகாப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு கடற்பரப்பு மற்றும் கரையோரப் பகுதிகளில் தீவிர ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும், சில இந்தியர்கள் படகு மூலம் நாட்டுக்குள் அண்மைய நாட்களில் பிரவேசித்துள்ளமை குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாக கடற்படை பேச்சாளர் ஆங்கில ஊடகமொன்றுக்கு மேலும் தெரிவித்துள்ளார்.
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan