ஜனாதிபதி பதவி விலகுவது தொடர்பில் கோட்டாபயவின் பின்னடிப்பில் மறைந்துள்ள ரகசியம்
நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய மக்கள் புரட்சியை அடுத்து ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக கோட்டபாய ராஜபக்ச உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
எதிர்வரும் 13ஆம் திகதி தனது பதவி விலகலை நாட்டு மக்களுக்கு அறிவிப்பார் என தனக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் அமைதியான முறையில் அதிகார மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதால் நாட்டில் மேலும் அமைதியின்மை ஏற்படக் கூடாது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் புரட்சி

எனினும் நேற்று மாலைக்குள் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியில் இருந்து விலக தீர்மானித்திருந்தார் என செய்தி வெளியாகியிருந்தது. ஆனாலும் அரசியல் நோக்கங்களின் அடிப்படையிலேயே கோட்டாபய தனது பதவி விலகலை பிற்போட்டுள்ளார் என தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
திட்டமிட்டபடி ஜனாதிபதி நேற்று பதவி விலகியிருந்தால், சமகால பிரதமர் ரணில் விக்ரமசிங்க தானாகவே பதில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்.
ரணிலுக்கு எதிராக கோட்டாபயவின் சதி

இந்நிலையில் அவ்வாறான நிலைமை ஏற்படுவதை தவிர்க்கவே, கோட்டாபய கால அவகாசத்தை கோரியுள்ளார்.
நேற்றைய தினம் ஜனாதிபதி மாளிகையை மக்கள் முற்றுகையிட்டதன் பின்னர், பிரதமர் பதவியில் இருந்து ரணில் விலக வேண்டும் என பல தரப்பினராலும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அணையா விடுதலைத்தீ சங்கரின் சாவு எப்படி வீரசரித்திரமானது.. 11 மணி நேரம் முன்
பள்ளி செல்லும் அகதிப் பிள்ளைகளை தங்கள் நாட்டுக்கு போகும்படி கூறுவதால் உருவாகியுள்ள கலக்கம் News Lankasri
வெட்ட வந்த அறிவுக்கரசி, கடும் ஷாக்கில் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
சரிகமப சீசன் 5 போட்டியாளர் சின்னு செந்தமிழனுக்கு இப்படியொரு வாய்ப்பா?... வேறலெவல் சர்ப்ரைஸ் Cineulagam