கிளிநொச்சியில் நாளை முதல் இரண்டாவது தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பம்
நாளை முதல் இரண்டாவது தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பமாவதாகக் கிளிநொச்சி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி சரவணபவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அதற்கு அமைவாக இரண்டாவது தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளக் கீழ்வரும் தடுப்பூசி நிலையங்களில் அருகில் உள்ள நிலையத்துக்குச் சென்று மக்கள் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம், புனித திரேசா பெண்கள் கல்லூரி, உருத்திரபுரம் ஆரம்ப வைத்தியசாலை, வட்டக்கச்சி மத்திய கல்லூரி, அக்கராயன் மகாவித்தியாலயம், பாரதிபுரம் மகாவித்தியாலயம், புன்னை நீராவி அ.த.க. பாடசாலை, பிரமந்தனாறு கிராம சேவையாளர் அலுவலகம், தர்மபுரம் மத்திய கல்லூரி, கல்மடுநகர் அ.த.க. பாடசாலை, முருகானந்தா அ.த.க. பாடசாலை, பரந்தன் கிராம சேவையாளர் அலுவலகம் முழங்காவில் வைத்தியசாலை, பூநகரி வைத்தியசாலை, வேவில் வைத்தியசாலை, பளை மத்திய கல்லூரி ஆகிய தடுப்பூசி நிலையங்களில் பொதுமக்கள் தடுப்பூசிகளைச் செலுத்திக்கொள்ளலாம்.
தடுப்பூசி செலுத்தச் செல்வோர் தடுப்பூசி அட்டைகளை எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை முக கவசங்களை உரிய முறையில் அணிந்து சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி கோவிட் பரவலைக் கட்டுப்படுத்தவும், சுகாதாரத் துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்கவும் பொதுமக்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.





அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri

வாட்டர் மெலன் திவாகர் முதல் அகோரி கலையரசன் வரை.. பிக் பாஸ் 9ல் நுழைத்த 20 போட்டியாளர்கள் முழு லிஸ்ட் இதோ Cineulagam
