விபத்தில் பாடசாலை மாணவன் பலி
கல்வி சுற்றுலா சென்ற பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில், மாணவர் ஒருவர் ஜன்னலுக்கு வெளியே தலையை வைத்ததால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துள்ளார்.
ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ருமஸ்ஸால மலையை நோக்கி செல்லும் வீதியில் நேற்று (20.08.2023) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்திற்கான காரணம்
பேருந்தின் பின் இருக்கையில் பயணித்த மாணவன் ஜன்னலுக்கு வெளியே தலையை வைத்ததால், மின்கம்பத்தில் தலை மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
படுகாயமடைந்த மாணவர் கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
உடுபத்தாவ, குளியாபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபராதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

குட் பேட் அக்லி ப்ளாக் பஸ்டர் வெற்றி.. அஜித் அடுத்த படத்திற்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா Cineulagam

viral video: படமெடுத்து நின்ற ராஜ நாகத்தை அசால்ட்டாக வெறும் கையில் தூக்கிய நபர்! இறுதியில் என்ன நடந்தது? Manithan
