டக்ளஸ் தேவானந்தாவை போல் கிழக்கு அமைச்சர்களும் வெகுவிரைவில் துரத்தியடிக்கப்படுவார்கள்: சாணக்கியன் பகிரங்கம்
மக்களின் வரிப்பணத்தில் நடைபெறும் அபிவிருத்தி திட்டங்கள் மக்களுக்கு திருப்தி அளிக்காதவிடத்து வடக்கில் கடற்றொழில் அமைச்சருக்கு நடந்த அதே நிலையே கிழக்கில் உள்ள அமைச்சர்களுக்கும் நிகழும் மக்களால் அவர்களும் வெகுவிரைவில் துரத்தியடிக்கப்படுவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டம் போரதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட திக்கோடை கிராமத்தில் நேற்று (06.04.2024) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
விலைவாசிகள் அதிகரிப்பு
மேலும் தெரிவிக்கையில், ”இந்த நாட்டிலே வாழ முடியாத அளவிற்கு விலைவாசிகள் அதிகரித்துள்ளன. இதனால் தற்காலத்தில் கிராமங்களிலுள்ள இளைஞர்கள் மத்திய கிழக்கு நாடுகளிலே தொழிலுக்காகச் சென்றுள்ளனர்.

எதிர்காலத்தில் தேர்தல்கள் இடம்பெறும் நிலையில் அதில் மக்கள் தீர்க்கமான முடிவெடுக்கும்போது, மாற்றங்களை நாம் கொண்டு வரலாம். ஜனாதிபதித் தேர்தலிலே சாணக்கியன் எம்.பியை போட்டியிட வைக்கலாம் என சிங்கள சகோதரர் கூறியதாக அதிபர் ஒருவர் என்னிடம் தெரிவித்துள்ளார்.
இந்தநாட்டிலே ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கான சந்தர்ப்பம் உள்ளது. ஜனாதிபதித் தேர்தலிலே பேரம் பேசுவதற்காக பலர் அணி அணியாக சேர்ந்து கொண்டு செல்கின்றார்கள்.
கிழக்கிலுள்ள முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்தால் தாம் பேரம் பேசும் சக்தியாக திகழலாம் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அது அவர்களின் நிலைப்பாடு.
அரசியல் தீர்வு
ஆனால். தமிழ் சமூகமாகிய நாங்களும் எங்களைப் பலப்படுத்த வேண்டிய காலப்பகுதியாகும். இலங்கைத் தமிழரசுக் கட்சி 1949ஆம் ஆண்டிலிருந்து இந்த நாட்டிலே தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வை நோக்கி செயற்பட்டுக் கொண்டு வருகின்றது.

இதற்காக வேண்டி நாங்கள் மக்களுக்குக் காட்டும் வழியிலே மக்கள் நின்று செயற்பட்டால் எமது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு அது ஒரு சந்தர்ப்பமாக அமையும்.
எனவே நாங்கள் அனைவரும் ஒரே அணியாக நின்று செயற்பட்டால் நாங்கள்தான் இந்த நாட்டில் அடுத்த ஜனாதிபதி யார் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக இருப்போம்” எனவும் சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
51 ஆண்டுகளுக்கு பின் நிறைவேறிய உலக கோப்பை கால்பந்து கனவு: இருந்தும் ஹைதி ரசிகர்கள் சோகம் News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan