மதுபானம் மற்றும் இறைச்சி விற்பனை முற்றாக நிறுத்த வேண்டும்! - பிரதமர் அறிவிப்பு
வெசாக் தினத்தை முன்னிட்டு நாளை (26) மற்றும் நாளை மறுதினம் (27) ஆகிய இரு தினங்களுக்கு மதுபான சாலைகள் மற்றும் இறைச்சி கடைகளை மூடுமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதற்கமைய 26 மற்றும் 27 தினங்களில் நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான சாலைகள் மற்றும் இறைச்சி கடைகள் மூடப்பட வேண்டியதுடன், சுப்பர் மார்க்கெட்களின் ஊடாக மதுபானம் மற்றும் இறைச்சி விற்பனை செய்யப்படக் கூடாது என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள இக்காலப்பகுதியில் மதுபான சாலைகளை மூடுமாறு அரசாங்கம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரு தினங்களுக்கு மதுபானம் மற்றும் இறைச்சி விற்பனையை முற்றாக நிறுத்துமாறு பிரதமர் அறிவித்துள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் வழுக்கி விழுந்த தமிழ், பதறி அடித்து ஓடிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam
