நாட்டை ஆட்சி செய்யும் கட்சிக்கு ஒழுக்கம் அவசியம் - ஜே.வி.பி
நாட்டை ஆட்சி செய்யும் கட்சிக்கு ஒழுக்கம் இருக்க வேண்டும் எனவும் ஒழுக்கம் இல்லாத கட்சி நாட்டை ஆட்சி செய்வதால், நாட்டில் பல நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய செயற்குழு உறுப்பினர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணி நாடு முழுவதும் முன்னெடுத்துள்ள கிராமத்தில் இருந்து ஆரம்பிப்போம் வேலைத்திட்டத்தின் கூட்டம் நாவலப்பிட்டி பிரதேசத்தில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே பிமல் ரத்நாயக்க இதனை கூறியுள்ளார்.
பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த நபர்கள் தமது கட்சிகளுக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். எமது கட்சிக்கு வேவறு எந்த கட்சியுடனும் தொடர்பில்லை. எமது கட்சி தனியாகவே மக்கள் மத்திக்கு வந்துள்ளது.
அதேவேளை இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள நேனோ திரவப் பசளை கொள்வனவில் மிகப் பெரிய மோசடி நடந்துள்ளது எனவும் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
சக்திக்கு என்ன ஆனது, குணசேகரன் மறைக்கும் தேவகி யார், பல உண்மை வெளிவந்த எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
குழந்தையை கவனிக்கும் பொறுப்பை வாழ் நாள் முழுவதும் ஏற்க தயார்... மாதம்பட்டி ரங்கராஜ் கொடுத்த ஷாக் Manithan