ஐக்கிய இராச்சியத்தில் தமிழர்களின் எழுச்சி! கோட்டாபய தொடர்பில் கடும் எதிர்ப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பருவநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஐக்கிய இராச்சியம் சென்றுள்ள நிலையில், அவருக்கு அங்கு பலத்த எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகின்றது.
குறிப்பாக புலம்பெயர் தமிழர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். இனப்படுகொலையாளியான இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை இந்த மாநாட்டில் கலந்துகொள்ள அழைக்க கூடாது என புலம்பெயர் தமிழர்கள் கோரியுள்ளனர்.
இலங்கை ஜனாதிபதியை கைது செய்ய வேண்டும் எனவும், அவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற ரீதியில் புலம்பெயர் தமிழர்கள் கோரியுள்ளனர்.
இலங்கை ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தினம் பாரிய போராட்டத்தை நடத்தவுள்ள நிலையில் அதற்குரிய முன்னோடியாகவும், தமிழர்களின் எழுச்சியை காண்பிக்கும் நோக்கிலும் பரப்புரைகள் வித்தியாசமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஸ்கொட்லாந்தில் உள்ள முக்கிய கட்டடங்களில் இலங்கை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராகவும், இலங்கை அரசாங்கத்துக்கும் எதிராகவும் மின்னொளி பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதில் இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தேடப்படும் நபராக அறிவித்து மின்னொளி பரப்புரைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. புலம்பெயர் தமிழர்களின் இந்த நடவடிக்கை இலங்கை அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.