முழுமைப் பொறுப்பையும் பொது மக்களுக்கு பாரப்படுத்தியுள்ள அரசாங்கம்!
கொரோனாவின் ஒமிக்ரோன் தொற்றை கட்டுப்படுத்த வேண்டியது பொதுமக்களின் கைகளிலேயே உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஹேமந்த ஹேரத் இதனை வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் முடியுமானளவு தடுப்பூசிகள், பூஸ்டர் வரை வழங்கப்பட்டுள்ளன. சுகாதார வழிக்காட்டல்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் உலக மற்றும் இலங்கையின் பொருளாதாரத்தின் கீழ் நாட்டை முடக்கும் சந்தர்ப்பங்கள் இல்லை.
எனவே பொதுமக்களே தமக்கிடையே கொரோனா ஒமிக்ரோன் பரவலை கட்டுப்படுத்த முயற்சிக்கவேண்டும்.
ஏனைய நாடுகளை காட்டிலும் இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றின் விகிதம் குறைவாகவே உள்ளது.
எனினும் எச்சரிக்கையின்றி இருந்தால், ஒரே நேரத்தில் சமாளிக்கமுடியாத அளவுக்கு தொற்று தீவிரமாகக்கூடிய ஏதுநிலைகள் உள்ளன.
எனவே அந்த நிலையை தவிர்ப்பது பொதுமக்களின் கடமையாகவே இருக்கும் என்று ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பொதுமக்களின் அலட்சியம் குறித்து பொது சுகாதார அதிகாரிகளால் தொடர்ந்தும் கண்காணிப்பை மேற்கொள்ளமுடியாது.
சிலரை சட்டத்தின் முன் நிறுத்துவதன் காரணமாக அனைவரையும் கட்டுப்படுத்தமுடியாது. அதில் சட்ட சிக்கல்களும் உள்ளதாகவும் அவர் எமது செய்திச்சேவையிடம் தெரிவித்தார்.

