அரசாங்கத்தின் அழைப்பினை புலம்பெயர் அமைப்புகள் சாதகமாக பயன்படுத்த வேண்டும்: இரா.துரைரெட்னம் (VIDEO)
இலங்கையில் விவசாயத்தினை ஊக்குவிக்க அமெரிக்க அரசாங்கம் வழங்கும் உதவியில் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மட்டு.ஊடக அமையத்தில் நேற்று(15.09.20222) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பயங்கரவாத தடைச்சட்டத்தினை இடைநிறுத்துவதற்கான நடவடிக்கை
“தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானதும் ஜனநாயகத்திற்கு விரோதமானதுமான பயங்கரவாத தடைச்சட்டத்தினை இடைநிறுத்துவதற்கான நடவடிக்கையினை மத்திய அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.
புலம்பெயர் அமைப்புகளுக்கு இலங்கை அரசாங்கம் முன்வைத்துள்ள அழைப்பினை
புலம்பெயர் அமைப்புகள் சாதகமான முறையில் பயன்படுத்தி கொள்ளவேண்டும்”எனவும் தெரிவித்துள்ளார்.





ட்ரம்ப் அழுத்தத்தால் ஐரோப்பியம் ஒன்றியம் எடுக்கவிருக்கும் அதிரடி முடிவு: ரஷ்யாவிற்கு பின்னடைவு News Lankasri
