ஒரு நாளில் 22 சிறுவர்கள் துஷ்பிரயோகம் - உறவுகளால் நாசமாகும் இலங்கை சிறார்
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கோவிட் சுகாதார ரீதியில் பிரச்சினைகளை தோற்றுவித்துள்ள நிலையில், சிறுவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும், சமூகப் பிரச்சினையாக சிறுவர் துஷ்பிரயோகம் மாறியுள்ளது.
அபிவிருத்தியடைந்து வரும் இலங்கை போன்ற நாடுகளில் நாளுக்கு நாள் சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துக் கொண்டே செல்வதால், அது நாட்டின் சுபீட்சத்தையும், சிறுவர்களின் எதிர்காலத்தையும் நாசமாக்கி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் நடுப்பகுதியில் நாட்டின் அனேக ஊடகங்களில் அதிகம் பேசப்பட்ட 15 வயதான சிறுமி ஒருவர் இணையத்தளம் ஊடாக விளம்பரப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்ட செய்தி நாளடைவில், இலங்கையின் அயல் நாடுகளான மாலைதீவு மற்றும் இந்திய ஊடகங்களும் இச்செய்திக்கு முன்னுரிமை அளித்திருந்தமையைக் காண முடிந்தது.
15 வயதுச் சிறுமியைப் பாலியல் நடவடிக்கைளுக்காக, இணையத்தளம் ஊடாக விற்பனை செய்த குற்றச்சாட்டில், 35 வயதான நபரொருவர், கடந்த ஜூன் மாதம் 9ஆம் திகதியன்று கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணைகளிலே பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இது தொடர்பான விரிவான தொகுப்புடன் வருகிறது இந்த காணொளி,