ஈஸ்டர் ஆணைக்குழுவின் அறிக்கை அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் பேராயருக்கு வழங்கப்படும் - நிமல் லங்சா
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்க உள்ளதுடன் அதன் பின்னர், அதன் பிரதி வணக்கத்திற்குரிய பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்துக்கு வழங்கப்படும் என ராஜாங்க அமைச்சர் நிமல் லங்சா தெரிவித்துள்ளார்.
திவுலபிட்டிய வீதி அபிவிருத்தித்திட்டத்தை ஆரம்பித்து வைத்த பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ராஜாங்க அமைச்சர் நிமல் லங்சா பதிலளிக்கும் போதே இதனை கூறியுள்ளார். கேள்வி - எதிர்வரும் தேர்தலில் பொதுஜன பெரமுன கூட்டணி அமைக்கும் போது உங்களது இடங்கள் குறையுமா? பதில் - ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒரு தீவிரவாத கட்சியோ அல்லது இனவெறி கட்சியோ அல்ல.
எல்லா இனங்களையும் மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் கட்சி. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்பது கிராம மக்களுடன் இருக்கும் கட்சி. அதேபோல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்பது நாளுக்கு நாள் முன்னேறி வரும் ஒரு கட்சி. நாட்டு மக்களின் பிரச்சினைகளைக் கேட்கும் ஒரு உழைக்கும் மக்களின் கட்சி. நாங்கள் எந்த நாட்டையும், எந்த நாட்டையும், உலகில் இனத்தையும் எந்த நபரையும் ஆத்திரமூட்டும் கட்சி அல்ல.
கேள்வி - புதிதாக தெரிவு செய்யப்பட்ட பின் வரிசை நாடாளுமன்ற உறுப்பனர்கள் தனியான கூட்டணியைஉருவாக்குகிறார்கள் என்பது உங்களுக்கு புரியவில்லையா? பதில் - ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சித் தலைமையின் அனுமதியுடன் ஒரு குழுவாக இணைந்துள்ளனர்.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவை அமைச்சர்களிடம் தங்கள் பிரச்சினைகளை முன்வைக்கவும், மக்கள் சார்பாக ஒரு வாய்ப்பைப் பெறவும் அவர்கள் இவ்வாறு கூட்டணியாக இணைந்துள்ளனர்.
இது போன்ற ஒவ்வொரு அரசாங்கத்திலும் இப்படியான குழுக்கள் இருந்தன.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இந்த குழுவினர் உண்மையில் கட்சியை வலுப்படுத்தவும், அரசாங்கத்தை வலுப்படுத்தவும், ஜனாதிபதியை பலப்படுத்தவும் ஒன்றிணைந்ததுள்ளனர் எனவும் நிமல் லங்சா குறிப்பிட்டுள்ளார்.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 8 மணி நேரம் முன்

ரோஹினி, க்ரிஷ் மாற்றி மாற்றி சொன்ன விஷயம், சந்தேகத்தில் முத்து-மீனா, அப்படி என்ன நடந்தது... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

Siragadikka Aasai: தானாக வந்து வசமாக சிக்கிய ரோகினி... குடும்பத்தினர் க்ரிஷ் அம்மாவை அறிவார்களா? Manithan
