பரிசோதனைகள் குறைக்கப்பட்டுள்ளமை மற்றுமொரு அலைக்கு காரணமாக அமையலாம் - ரவி குமுதேஷ்
கோவிட் பரிசோதனைகளை குறைத்துள்ளதன் காரணமாக தற்போது காணப்படும் நிலைமையை விஞ்ஞானப்பூர்வமாக அறிய முடியாது எனவும் பரிசோதனைகள் குறைப்பட்டுள்ளமையானது மற்றுமொரு கோவிட் அலை ஏற்பட வழிவகுக்கலாம் எனவும் இரசாயன ஆய்வுகூட தொழில் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
மூன்று காரணங்களால் கொழும்பில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கலாம். தடுப்பூ செலுத்தியமை மற்றும் அதிகளவானோர் தொற்றுக்கு உள்ளாகாமை என்பன இரண்டு பிரதான காரணங்கள்.
கோவிட் குறையும் வேகத்தை விட கூடிய வேகத்தில் பரிசோதனைகள் குறைப்படடுள்ளமை இதற்கு காரணம். பரிசோதனைகளை குறைக்கப்பட்டுள்ளதால், தற்போதைய நிலைமையை விஞ்ஞான ரீதியாக சரியாக கணக்கிட முடியவில்லை.
இதனால், தொற்று நோய் தொடர்பில் தவறான புரிந்துக்கொண்டு ஆபத்து காணப்படுவதுடன் அது மீண்டும் ஒரு அலை ஏற்பட காரணமாக அமையலாம்.
பரிசோதனைகள் குறைப்பட்டமை தொடர்பாக சுகாதார அமைச்சின் இரசாயன ஆய்வு கூட சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நேரடியாக பொறுப்புக் கூற வேண்டும். நாட்டிற்கு வரவிருந்த புதிய தொழிநுட்பம் மற்றும் பரிசோதனை வசதிகளை தடுக்கவும் தாமதிக்கவும் அவர் எடுத்த தீர்மானம் இதற்கு காரணம் எனவும் ரவி குமுதேஷ் குற்றம் சுமத்தியுள்ளார்.