ராஜபக்சவினர் மீண்டும் எழுந்து வருவார்கள்:ரோஹித்த அபேகுணவர்தன
ராஜபக்சவினர் மீண்டும் எழுவார்கள் எனவும் அது நடக்கும் திகதி காலத்தை கூற முடியாது எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று ஜனாதிபதியின் அக்கிராசன உரை தொடர்பான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தற்போது அனைவரும் எந்நேரமும் ரணில் ராஜபக்ச அரசாங்கம் என்று கூறுகின்றனர். தற்போது ராஜபக்சவினர் இல்லை. மகிந்த ராஜபக்ச தற்போது நாடாளுமன்ற உறுப்பினர். பசில் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச நாட்டில் இருந்து வெளியில் சென்றுள்ளார். நாமல் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினர். ராஜபக்சவினர் தொடர்பாக அதிசயமான பீதி இருக்கின்றது. எந்த நேரமும் ராஜபக்சவினர்.
இரவு 2, 3 மணிக்கு ராஜபக்சவினரை கனவில் கண்டு விழித்து பயப்படுவார்கள் என நினைக்கின்றேன். ஊஞ்சல் பின்நோக்கி சென்றால், முன்நோக்கி வரும். நாங்கள் அன்றும் ராஜபக்சவினருடன் இருந்தோம்.
தற்போது ராஜபக்சவினருடன் இருக்கின்றோம். நாளையும் ராஜபக்சவினருடன் இருப்போம்.ராஜபக்சவினர் மீண்டும் எழுந்து வருவார்கள் அதற்கு நேரம் காலம் இல்லை. அது கட்டாயம் நடக்கும் என நினைவூட்ட விரும்புகிறேன் என ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 6 மணி நேரம் முன்
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam