புதிய பயங்கரவாதச் சட்டத்தால் நாடாளுமன்றத்தில் வெடித்தது மோதல்! எதிர்க்கட்சி கடும் எதிர்ப்பு

Sri Lanka Politician Sri Lanka Prevention of Terrorism Act ITAK Protection of the State from Terrorism Act (PSTA)
By Shadhu Shanker Nov 23, 2026 11:56 AM GMT
Report

முன்மொழியப்பட்டுள்ள 'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம்' (PSTA) தொடர்பில் பரந்தளவிலான பொதுமக்கள் கலந்தாலோசனைகள் முன்னெடுக்கப்படும் வரை, அதுகுறித்து இறுதித் தீர்மானம் எதனையும் எடுக்கக் கூடாது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியதால் நாடாளுமன்றத்தில் இன்று (23) பதற்றமான சூழல் ஏற்பட்டது.

இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பிய தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரொருவர், பொதுமக்கள் கலந்தாலோசனைகள் நடத்தப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கடந்த நவம்பர் 7ஆம் திகதி அறிவித்திருந்த போதிலும், குறித்த சட்டமூலம் தொடர்பில் ஆராய்வதற்காக ஆளுகை தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு இன்று(23) பிற்பகல் கூடவுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.

 இறுதி முடிவு

இதனையடுத்து, பைசர் முஸ்தபா, அஜித் பி. பெரேரா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒன்றிணைந்து, குழுவில் விவாதங்களை முன்னெடுக்க அனுமதிப்பதுடன், பொதுமக்களின் கருத்துக்கள் முழுமையாகப் பெறப்படும் வரை இறுதி முடிவை எடுப்பதைத் தவிர்க்குமாறு சபாநாயகரிடம் எழுத்துமூலக் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், பல சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு கலந்தாலோசனைகளில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படவில்லை எனக் குறிப்பிட்ட தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரின்  கருத்துக்களையும் கேட்டறிந்த பின்னரே சட்டமூலம் தொடர்பில் முடிவெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

புதிய பயங்கரவாதச் சட்டத்தால் நாடாளுமன்றத்தில் வெடித்தது மோதல்! எதிர்க்கட்சி கடும் எதிர்ப்பு | The Psta Bill Was Introduced In Parliament Fight

இதற்குப் பதிலளித்த நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார, முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலம் உயர் நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதேவேளை பொதுமக்கள் கலந்தாலோசனைகளை நடத்துவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

கலந்தாலோசனைகளில் பங்கேற்றவர்கள் தாமாகவே முன்வந்து அதற்கான கோரிக்கைகளை விடுத்திருந்ததாகக் குறிப்பிட்ட அவர், மேலதிக கருத்துக்கள் இருப்பின் அவற்றைத் துறைசார் மேற்பார்வைக் குழுவின் முன்னிலையில் முன்வைக்க முடியும் என்றும் கூறினார்.

 பயங்கரவாதத் தடைச் சட்டம்

அத்துடன், இந்த விவகாரத்தில் பிரதி சபாநாயகரின் தீர்ப்பைக் கோருவதற்குப் பதிலாக, சம்பந்தப்பட்ட குழுவே தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.

இதன்போது தலையிட்ட பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, குறித்த விவகாரம் துறைசார் மேற்பார்வைக் குழுவின் மட்டத்திலேயே தீர்க்கப்பட வேண்டும் என்றும், இதனை நாடாளுமன்றத்தில் மேலும் விவாதிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்தார்.

புதிய பயங்கரவாதச் சட்டத்தால் நாடாளுமன்றத்தில் வெடித்தது மோதல்! எதிர்க்கட்சி கடும் எதிர்ப்பு | The Psta Bill Was Introduced In Parliament Fight

எனினும், 1979ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் (PTA) பதிலாகவே புதிய சட்டமூலம் கொண்டுவரப்படவுள்ளதாகச் சுட்டிக்காட்டிய  அவர், இவ்வாறான முக்கியமான சட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்னர் நாடாளுமன்றம் விரிவான பரிசீலனைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

சட்டம் இயற்றப்பட்ட பின்னர் அதனை மீளாய்வு செய்வதற்கான உரிய பொறிமுறை நாடாளுமன்றத்தில் இல்லாத நிலையில், சட்டமூலம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னரான கட்டத்திலேயே அனைத்து தரப்பினரின் கருத்துக்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வாதப்பிரதிவாதங்களுக்கு மத்தியில், பல எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது ஆசனங்களிலிருந்து எழுந்து எதிர்ப்பை வெளியிட்டனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், குறித்த துறைசார் மேற்பார்வைக் குழு நாடாளுமன்றத்தினாலேயே நிறுவப்பட்டுள்ளதால், இந்த விவகாரம் தொடர்பில் தீர்மானிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே இருப்பதாகத் தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரத்தைக் குழுவுக்குள் மட்டுப்படுத்தும் முயற்சி நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளை மீறும் செயலாகும் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர்ச்சியான எதிர்ப்புகளுக்கு மத்தியிலும்,  அவர், முன்வைத்த கருத்துக்கள் நாடாளுமன்றப் பதிவில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, இந்த விடயம் தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழுவே கவனம் செலுத்த வேண்டும் என மீண்டும் வலியுறுத்தினார்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், கொழும்பு, Toronto, Canada

23 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கனடா, Canada

29 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US