PET பிளாஸ்டிக் போத்தல்கள் குறித்து நேரடி கவனம்
QR (கியூஆர்) குறியீட்டின் அடிப்படையில் மீள்சுழற்சிக்காக PET பிளாஸ்டிக் போத்தல்களைச் சேகரிக்கும் செயற்பாடு குறித்து சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தலைமையில் கூடியபோதே இவ்விடயம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, ஒவ்வொரு வருடமும் நாட்டுக்குள் 450,000 டொன் பிளாஸ்டிக் இறக்குமதி செய்யப்படுவதாகவும், இதில் 50,000 டொன் மாத்திரமே மீள்சுழற்சிக்காகச் சேகரிக்கப்படுவதாகவும் அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார்.
PET பிளாஸ்டிக் போத்தல்கள் குறித்து நேரடி கவனம்
PET பிளாஸ்டிக் போத்தல்கள் குறித்து நேரடியான கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், மாதத்திற்கு சுமார் 1200 டொன் PET பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டாலும், அதில் 400 டொன் மாத்திரமே மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்படுவதாகவும் கூறியுள்ளார்.
இதன்படி, மீதமுள்ள 900 டொன் முறையற்ற முறையில் சுற்றுச்சூழலில் அழிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு அகற்றப்படும் பிளாஸ்டிக் போத்தல்கள் ஆறுகள் மற்றும் கால்வாய்கள் போன்றவற்றில் கலப்பதுடன், சில திறந்த வெளியில் எரியூட்டப்படுவதுடன், சில நிலத்தில் புதைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போத்தலொன்றுக்குப் போதியளவு பணம் வழங்கப்படாமையால் இந்தப் போத்தல்களைச் சேகரிப்பதில் பொதுமக்கள் அதிகம் அக்கறை காண்பிப்பதில்லையென்பதும் தெரியவந்துள்ளது.
பிளாஸ்டிக் போத்தல் மீள் சுழற்சி
இவ்வாறான நிலையில் பிளாஸ்டிக் போத்தல்களை QR குறியீட்டின் அடிப்படையில் மீள் சுழற்சிக்காக சேகரிக்கும்போது வைப்புத்தொகையை மீளஅளிக்கும் முறையொன்று தொடர்பில் தொழில்நுட்ப மற்றும் நிதி அடிப்படையிலான திட்டங்களை சமர்ப்பிக்குமாறு தொழில்துறையில் உள்ளவர்களிடம் கோரி பத்திரிகைகளில் விளம்பரங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
எனினும், இதற்காக வழங்கப்பட்ட காலஅவகாசம் போதுமானது இல்லையென தொழில்துறையைச் சேர்ந்தவர்கள் குழுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதற்கமைய திட்டங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால எல்லையை நீடிக்குமாறு குழுவில் ஆஜராகியிருந்த தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் நீண்ட கலந்துரையாடலை நடத்திய மேற்பார்வைக் குழு திட்டங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால எல்லையை ஓகஸ்ட் 27ஆம் திகதி வரை நீடிக்குமாறும் பரிந்துரைத்து்ளது.
அத்துடன், இது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் குழு சுற்றாடல் அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri
