பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் முக்கிய பிரச்சினையாக மாறிவரும் குடியேற்ற பிரச்சினை
சட்டவிரோதமாக குடியேறிய நிலையில் பிரான்ஸ் அதிகாரிகளால திருப்பி அனுப்பப்பட்டவர்களை அவர்களின் நாடுகளின் அரசாங்கங்கள் திரும்ப பெற மறுத்தால், வட ஆமெரிக்க நாடுகளில் இருந்து மக்களுக்கான விசா எண்ணிக்கையை பிரான்ஸ் குறைக்கும் என பிரான்ஸ் அரசாங்கத்தின் செய்தி தொடர்பாளர் கேப்ரியல் அட்டல் (Gabriel Attal) இன்று தெரிவித்துள்ளார்.
அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலில் குடியேற்ற பிரச்சினை ஒரு முக்கிய பிரச்சினையாக மாறி வருகின்றது.
வலதுசாரிகள் மற்றும் தீவிர வலதுசாரி கட்சிகள் நடுநிலைவாத தலைவரான இம்மானுவேல் மெக்ரோனின் கொள்கைகளுக்கு சவால் விடுத்து வருகின்றன. தான் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்து மெக்ரோன் இதுவரை அறிவிக்கவில்லை.
பிரான்ஸ் அரசாங்கம் அல்ஜீரியா, மொராக்ககோ, நாடுகளில் இருந்து வரும் குடிமக்களுக்கான விசா அனுமதிகளை பாதியாக குறைக்கும் எனவும், துனியர்களுக்கான விசாக்கள் மூன்றில் ஒரு பங்கு குறைக்கும் என பிரான்ஸ் அரசாங்கத்தின் பேச்சாளர் அட்டல் குறிப்பிட்டுள்ளார்.
தமது நாடுகள் விரும்பாத குடிமக்களை பிரான்ஸ் தனது நாட்டில் வைத்திருக்காது எனவும், இது அவசியமான முடிவு எனவும் அட்டல் பிரான்ஸ் ஐரோப்பா வானொலியிடம் கூறியுள்ளார்.
இந்த நிலையில்,பிரான்ஸின் இந்த நடவடிக்கை நியாயமற்றது எனவும் ஒழுங்கற்ற குடியேற்றத்திற்காக போராட்டத்தில் ராஜதந்திர ஒத்துழைப்பின் யாதார்தத்தை பிரதிபலிக்கவில்லை எனவும் மொரக்கோ வெளிவிவகார அமைச்சர் நாசர் போரிட்டா குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, அடுத்தாண்டு தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால், குடியேற்றங்களை கடுமையாக்கும் வரையறைகளை பரிந்துரைக்கும் பொது வாக்கெடுப்பை நடத்த போவதாக பிரான்ஸின் தீவிர வலதுசாரி தலைவரான மனை் லு பென் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் எல்லைக்குள் நுழைவதற்கும், பிரான்ஸ் குடியுரிமையை பெறுவதற்குமான அளவுகளை இந்த வாக்கெடுப்பு பரிந்துரைக்கும். அத்துடன் பிரான்ஸ் பிரஜைகளுக்கான வீட்டு வசதி, தொழில், சமூக பாதுகாப்பு சலுகைகக்கு முன்னுரிமை வழங்குவதற்கான கடுமையான அளவு கோல்கள் பரிந்துரைக்கப்படும் என மரைன் லு பென் குறிப்பிட்டுள்ளார்.
2017 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மரைன் லு பென் இரண்டாம் இடத்தை பெற்றதுடன், மெக்ரோனால் 66 சத வீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.