மன்னார் மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து ஆராய்வு (Photos)
மன்னார் மாவட்டத்திலுள்ள மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து ஆராயப்பட்டுள்ளது.
குறித்த ஆராய்வு கூட்டம் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்டான்லி டி மெல்னின் நெறிப்படுத்தலின் கீழ், கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் தலைமையில் நேற்றைய தினம் (30.05.2023) இடம்பெற்றுள்ளது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன், எஸ்.வினோ நோகராதலிங்கம், சார்ள்ஸ் நிர்மலநாதன், குலசிங்கம் திலீபன், வடமாகாண பிரதம செயலாளர் ஆகியோரின் பங்கேற்புடன் இடம்பெற்றுள்ளது.
ஆராயப்பட்டு தீர்வுகள்
இதில் தாழ் நில பிரதேசங்களில் காணப்படும் குளங்கள் அவசரமாகப் புனரமைப்பது சம்பந்தமாகவும், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை சம்பந்தமாகவும், தொடராகப் பேசப்பட்டு வரும் காணிப் பிரச்சினைக்கான தீர்வினைப் பெற்றுக் கொடுப்பது சம்பந்தமாகவும், வீதி அபிவிருத்தி, கல்வி, சுகாதாரம், மீன்பிடி, வனவளம், நீர்ப்பாசன திணைக்களம், போக்குவரத்து, முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பள முரண்பாடு, போன்ற இதர விடயங்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டு தீர்வுகளும் எட்டப்பட்டுள்ளன.
இந்தக் குழுக்கூட்டத்தில், மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய 5 பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், முப்படை பிரதானிகள், அரச பதவி நிலை, உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
![Gallery](https://cdn.ibcstack.com/article/cd091930-6f43-4c3a-ab54-bbc00e42bf12/23-6476c5c9057d0.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/94c283ee-1c01-4902-bddd-03e90e176734/23-6476c5c9708b9.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/ced8bddd-f47f-47e6-869a-9db42e194c7a/23-6476c5c9c9546.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/917ccd2b-5eca-43d7-adb5-64417bb74294/23-6476c5ca2eb3d.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/5088a671-3238-4ab5-b710-2d4064969962/23-6476c5ca971e9.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/5d76bdd4-ea0c-4737-9ff3-dd904ea10585/23-6476c5caf23dd.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/497f74bb-bb7a-4d69-a91c-bf5637da26f3/23-6476c5cb55229.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/33874863-f5b9-47fa-85b4-0b4518b916db/23-6476c5cbb0199.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/b9c13f16-803d-4a17-81cf-1743f17663ff/23-6476c5cc158b7.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/4408448c-e734-4f12-b263-76aeadc0033b/23-6476c5cc63428.webp)
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)