சந்திரிக்கா - ரணில் நேரடி மோதல்! ரணில் - மகிந்தவை கைது செய்வதில் நெருக்கடி
மகிந்த மற்றும் ரணில் ஆகியோர் தண்டிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இந்த அரசாங்கத்தில் மிக அதிகமாக காணப்படுகின்றது என்று புலனாய்வு செய்தியாளர் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கைது பட்டியலில் முக்கிய நபர்கள்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பான விடயத்தை முதலில் அநுர குமார திஸாநாயக்க கையில் எடுக்கப் போகின்றார். அதனையடுத்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலும் நடவடிக்கைகளை அநுர தரப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த நாட்டிற்குள் அந்நிய நாடுகளின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதன் காரணமாக ரணில் மற்றும் மகிந்தவை கைது செய்வதில் அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் முட்டுக்கட்டையாக இருக்கும்.
சாட்சிகள் பலமாக இருந்தால் கோட்டாபய ராஜபக்ச உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவார் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அண்மையில் கொழும்பில் வைத்து முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் ஊழல் தொடர்பான விடயங்களில் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.