வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்! விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு- செய்திகளின் தொகுப்பு
போராட்டம் எனும் பெயரில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் வெளிநாடு செல்ல முடியாது எனவும் அவர்களுக்கு அரச வேலையும் கிடையாது என்று முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
வன்முறைகளில் ஈடுபட்ட பலரது கைவிரல் அடையாளங்கள் பெறப்பட்டு அவை விமான நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன, அவர்கள் வெளிநாட்டுக்கு செல்ல முடியாது, அதுமட்டுமல்லாது அரச தொழில் உட்பட தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளவும் முடியாதென தெரிவித்துள்ளார்.
மேலும், வன்முறைகளில் ஈடுபடுபவர்களே அவசரகால நிலை தொடர்பில் பயப்பட வேண்டும், சாதாரண ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் அது தொடர்பில் பயப்பட வேண்டிய அவசியம் கிடையாதென்றும் சரத் வீரசேக்கர தெரிவித்தார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதியநேர செய்திகளின் தொகுப்பு,