தங்கம் வென்ற வீரருக்கு வீடு ஒன்றை பரிசளித்த பிரதமர்!
கடந்த ஆண்டும் டோக்கியோவில் நடைபெற்ற பராலிம்பிக் 2020 இல் ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனையுடன் இலங்கைக்காக தங்கப் பதக்கத்தை வென்ற தினேஷ் பிரியந்த ஹேரத்துக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச புதிய வீட்டையும் கையளித்தார்.
பிரதமரின் தலையீட்டில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, அலரிமாளிகையில் வைத்து புதிய வீட்டின் பரிசு அட்டையை அவருக்கு வழங்கினார்.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழுள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான கொழும்பு 02, கொம்பனி வீதி, மெட்ரோசா ஹோம்ஸ் வீடமைப்புத் திட்டத்தின் 40A4/10 இலக்க வீடு தினேஷ் பிரியந்த ஹேரத்துக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பரா தடகள வீரர்களுக்கு தமது திறமைகளை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவது பாராட்டுக்குரியது என்றார்.





புலம்பெயர்ந்தோர் மீது பழி சுமத்துவதை நிறுத்துங்கள்... உள்துறைச் செயலருக்கு 105 தொண்டு நிறுவனங்கள் கடிதம் News Lankasri

தப்பிக்கும் போது குணசேகரனிடம் வசமாக சிக்கிய சக்தி, தர்ஷன், பின் நடந்த பரபரப்பு சம்பவம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
