கண்டி தலதா மாளிகையில் வழிபாட்டில் ஈடுபட்டுள்ள பிரதமர்
கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்த பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று (04) முற்பகல் அங்கு வழிபாட்டில் ஈடுபட்டு ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டுள்ளார்.
ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்த பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் பிரதமரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச ஆகியோரை தியவதன நிலமே பிரதீப் நிலங்க தெல மற்றும் மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே ஆகியோர் வரவேற்றுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து பிரதமர் மற்றும் பிரதமரின் பாரியார் அங்கு வழிபாட்டில் ஈடுபட்டு ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டுள்ளனர். தலதா மாளிகையில் வழிபாட்டில் ஈடுபட்டதைத் தொடர்ந்து பிரதமர் அஸ்கிரி பீடத்தின் அனுநாயக்கர் வரலாற்றுச் சிறப்புமிக்க அத்கந்த ரஜமஹா விகாராதிபதி வணக்கத்திற்குரிய ஆணமடுவே ஸ்ரீ ரதனபால தம்மதஸ்ஸி தேரரைச் சந்தித்துள்ளார்.
அதனை தொடர்ந்து மல்வத்து மஹா விகாரை பீடத்தின் மஹாநாயக்கர் வணக்கத்திற்குரிய திப்படுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டுள்ளார்.
அதன்போது மல்வத்து பீடத்தின் அனுநாயக்கர் வணக்கத்திற்குரிய திம்புல்கும்புரே ஸ்ரீ சரணங்கர விமலதம்ம தேரர் மற்றும் மல்வத்து பீடத்தின் அனுநாயக்கர் கலாநிதி வணக்கத்திற்குரிய நியங்கொட விஜிதசிறி தேரர் ஆகியோரையும் சந்தித்து பிரதமர் அவர்களது நலன் விசாரித்துள்ளார்.
அஸ்கிரி மஹா விகாரைக்கு விஜயம் செய்த பிரதமர் மகிந்த ராஜபக்ச அஸ்கிரி மஹா விகாரை பீடத்தின் மஹாநாயக்கர் வணக்கத்திற்குரிய வரகாகொட தம்மசித்தி ஸ்ரீ பஞ்ஞானந்த ஞானரதனாபிதான தேரரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டுள்ளார்.
இதன்போது அஸ்கிரி பீடத்தின் பதிவாளர் வணக்கத்திற்குரிய மெதகம தம்மானந்த தேரர் மற்றும் அஸ்கிரி மஹா விகாரையின் அறங்காவல் சபை உறுப்பினரும், பதுளை முதியங்கன ரஜ மஹா விகாராதிபதி கலாநிதி வணக்கத்திற்குரிய முருத்தெனியே தம்மரதன தேரர் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
அதனை தொடர்ந்து அஸ்கிரி கெடிகே ரஜ மஹா விகாரைக்கு விஜயம் செய்த பிரதமர், விகாராதிபதி ஸ்ரீலங்கா ராமஞ்ஞா மஹா நிகாயவின் சிரேஷ்ட உறுப்பினர் வணக்கத்திற்குரிய கெப்பிடியாகொட சிறிவிமல தேரரிடமும் ஆசீர்வாதம் பெற்றுள்ளார்.
இதன்போது மகாவலி கங்கையுடன் இணைக்கப்படும் கெடம்பே போதியின் பக்கச் சுவரைப் புனரமைப்பது தொடர்பில் பிரதமர் கவனம் செலுத்தியுள்ளார்.
மகாவலி அமைச்சின் கீழ் குறித்த நிர்மாணப் பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் அச்சந்தர்ப்பத்திலேயே பிரதமரினால் இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இராணுவத்தின் உதவியுடன் அப்பக்கச் சுவரை நிர்மாணிக்குமாறு பிரதமர் அறிவித்துள்ளார். அஸ்கிரி மஹா விகாரையின் மஹா பிரிவெனாவிற்கு விஜயம் செய்த பிரதமர், கண்டி அஸ்கிரி மஹா பிரிவெனாவின் பிரிவெனாதிபதி, அஸ்கிரி பீடத்தின் பிரதி பதிவாளர் ஷாஸ்த்ரபதி வணக்கத்திற்குரிய நாரம்பனாவே ஆனந்த தேரரையும் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டுள்ளார்.
பிரதமரின் இவ்வழிபாட்டு நிகழ்வில் இராஜாங்க அமைச்சர்களான லொஹான் ரத்வத்தே, திலும் அமுனுகம, அனுராத ஜயரத்ன, நாடாளுமன்ற உறுப்பினர்களான வசந்த யாபா பண்டார, உதயன கிரிந்திகொட, குணதிலக ராஜபக்ச, மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ கமகே, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, தியவதன நிலமே பிரதீப் நிலங்க தெல, கண்டி விஷ்னு ஆலயத்தின் பஸ்னாஹிர நிலமே மஹேன் ரத்வத்தே, முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.









போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம் News Lankasri
