அரிசியின் விலை உயர்த்தப்படாது – மஹிந்தானந்த அலுத்கமகே
அரிசியின் விலை உயர்த்தப்படாது என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
அரிசியின் விலையை அதிகரிப்பதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்டியில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சுப்பர் மார்க்கட்கள், லங்கா சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் விலை நிர்ணயம் பேணப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
சில தரப்பினர்களின் ஏகபோக உரிமை காரணமாக அரிசிக்கான விலை உயர்த்தப்பட்டிருப்பதனை தாம் மறுக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்பொழுது நாட்டில் அரிசி விலை நிர்ணயம் தொடர்பில் நிலவி வரும் மாபீயாவை தகர்ப்பதற்கு அடுத்த பருவ காலத்தில நெல் கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.