தங்கத்தின் விலையில் பதிவான மாற்றங்கள்! வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல்
உலக சந்தையில் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில நாட்களாக உலகச்சந்தையில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், இன்றும் தங்கத்தின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
தங்கத்தின் விலை
அதற்கமைய, இன்றைய நிலவரப்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை வீழ்ச்சியை பதிவு செய்து, 4 ஆயிரத்து 747 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

அதன்படி, இன்றைய நிலவரப்படி 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை அமெரிக்காவில் 157.50 டொலர்களாகவும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் 572.25 டொலர்களாகவும், சவுதி அரேபியாவில் 589 ரியால்கள் வரையிலும் விற்பனையாவதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டு நிலவரம்
இதேவேளை உள்நாட்டுச் சந்தையில் நேற்யைதினம், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 49 ஆயிரத்து 750 ரூபாயாக விற்பனையானமை குறிப்பிடத்தக்கது.
அதன்படி, இன்று ( 12) 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 391,150 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
இதேவேளை, 21 கரட் தங்கம் பவுண் ஒன்று 342,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 358,550 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
பரபரப்பான 12 மணிநேர பேச்சுவார்த்தை: அடுத்து என்ன நடக்கும்..! பாகிஸ்தானிலிருந்து அவசரமாக வெளியேறும் அமெரிக்கா
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam