இருளில் மூழ்கும் இலங்கை! மெழுகுவர்த்தியின் விலையும் சடுதியாக அதிகரிப்பு
நாட்டில் மெழுகுவர்த்திகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியுள்ளதுடன், மெழுகுவர்த்தியின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.
நாடளாவிய ரீதியல் கடந்த சில நாட்களாக தொடர் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில்,மக்கள் அதிகளவில் மெழுகுவர்த்தியை கொள்வனவு செய்து வருகின்றனர்.
இதன் காரணமாக இவ்வாறு மெழுகுவர்த்திகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிய மெழுகுவர்த்தியின் மொத்த விலை ரூ.7.50 ஆகவும், சாதாரண அளவு மெழுகுவர்த்தி ரூ.37.50 ஆகவும் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகின்றது.
சாதாரணமாக 40 மெழுகுவர்த்திகள் காணப்படும் பக்கெற்றுக்கள் ஒரு மாதத்துக்குள் சுமார் ரூ.100 வரை உயர்ந்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
மெழுகுவர்த்தியை உற்பத்தி செய்வதற்காக பயன்படுத்தப்படும் ஏனைய பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாகவே இவ்வாறு மெழுகுவர்த்தி விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.