அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்துள்ள ஜனாதிபதி! ஹரீன் பெர்னாண்டோ தகவல்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அனைத்து துறைகளிலும் தோல்விடைந்துள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ(Harin Fernando) தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றின் மூலம் ஹரீன் இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.
ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியின் தலைவராக கலகொடத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டமைக்கு அவர் இவ்வாறு எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி விசாரணைகள் குழுவில் குற்றம் சுமத்தப்பட்ட நபருக்கு ஜனாதிபதி செயலணியின் தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டமை ஏற்புடையதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஞானசார தேரர் தலைமையிலான இந்த செயலணி அடுத்த ஆண்டு தமது முன்மொழிவுகள் அடங்கிய அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கவுள்ளது.
100 கோடி மரணங்களை ஏற்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்தது: AI தொடர்பில் பில் கேட்ஸின் எச்சரிக்கை News Lankasri