ஜனாதிபதி தோல்வியடைந்து விட்டார் - உடன் பதவி விலகுமாறு ஆளும் கட்சி உறுப்பினர் கோரிக்கை
நாட்டின் பொருளாதார நிலைமையை நோக்கும் போது அரசாங்கம் என்ற வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தோல்வியடைந்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி பதவி விலகிய பின்னர் நாடாளுமன்றத்தின் ஊடாக பதில் ஜனாதிபதி ஒருவரை நியமிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தால் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பது குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழுவொன்று எதிர்காலத்தில் நாடாளுமன்றை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

புதிய ஜனாதிபதியின் கீழ் சர்வகட்சி அரசாங்கம்
தற்போதைய ஜனாதிபதி பதவி விலகியதன் பின்னர் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச ஆதரவை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஆட்சியாளர்கள் ஆழமாக சிந்திக்க வேண்டுமெனவும், அவ்வாறு செய்யாவிட்டால் தற்போதைய நெருக்கடி மேலும் வளர்ந்து நாடு பாரிய அனர்த்தத்தில் முடியும் எனவும் சபை உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
ஜனாதிபதி பதவி விலகிய பின்னர் நியமிக்கப்படும் புதிய ஜனாதிபதியின் கீழ் சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் எனவும், அந்த ஆட்சிக்காக மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பான கலந்துரையாடல்கள் மிகவும் நெருக்கமாக உள்ளதாகவும், தற்போது பொதுஜன பெரமுன கட்சியின் இரண்டு சுயேச்சை எம்.பி.க்கள் மற்றும் ஏனைய குழுக்களும் இதற்காக ஒன்றிணைந்து வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா மேலும் தெரிவித்தார்.

500 உயிர்களைக் காத்த இந்திய கடற்படையின் துரித நடவடிக்கை... ஐ.நா.வுக்கான தூதர் வெளிப்படை News Lankasri
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
ரஜினி படத்தில் இருந்து வெளியேறிய சுந்தர் சி.. திடீரென குஷ்பூ - கமல்ஹாசன் நேரில் சந்திப்பு! Cineulagam