ஜனாதிபதியின் “வேலை செய்யும் எமது வீரன்” பாடலை தவறாக பயன்படுத்துவோருக்கு எதிராக விசாரணை
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் பயன்படுத்தி “வேலை செய்யும் எமது வீரன்” என்ற சிங்கள பாடலை சமூக வலைத்தளங்களில் தவறாக பயன்படுத்துவது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த பாடலை தவறாக பயன்படுத்தும் நபர்கள் குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு அழைக்கப்படுவார்களா என ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன, அது சம்பந்தமாக தான் அறியவில்லை எனக் கூறியுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது தேர்தல் பிரசாரத்திற்கான பாடலாக பயன்படுத்திய “வேலை செய்யும் எமது வீரன்” பாடலை சமூக வலைத்தளங்களில் பல வகையில் பயன்படுத்தி வருகின்றனர்.
எரிபொருள் வரிசைகள் மற்றும் மிரிஹான பால் மா வரிசை போன்ற இடங்களில் சிலர் இந்த பாடலை இசைப்பது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்ததது



