ஜனாதிபதி தனது அதிகாரத்தின் இறுதிக்காலத்தில் கடுமையான பாதிப்பை எதிர்நோக்கலாம்: திலங்க சுமதிபால
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க காலத்தில் மட்டுமல்லாது, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச காலத்திலும் நாட்டில் பல குண்டு வெடிப்புகள் நிகழ்ந்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக்குழு கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதலுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்புக் கூற வேண்டுமாயின், அந்த காலத்தில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவங்களுக்கு மேற்படி முன்னாள் ஜனாதிபதிகளும் குற்றவாளிகளாக இருக்க வேண்டும்.
ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்சவின் தற்போதைய நடத்த, அவரது அதிகாரத்தின் இறுதிக்காலத்தில் அவருக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தலாம் எனவும் திலங்க சுமதிபால குறிப்பிட்டுள்ளார்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 2 மணி நேரம் முன்
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
குறைந்த விலையில் கிடைக்கும் இந்த மீனை கட்டாயம் சாப்பிடுங்க.... முடி வளர்ச்சி முதல் இதய நோய் வரை தீர்வு Manithan